நெதர்லாந்து என்பது இன்றைய பெயர். அந்த காலத்தில் ஹாலந்து என்பார்கள். இல்லாவிட்டால் டச்சு நாடு என்பார்கள்.
நமது நாட்டில் இவர்களது தோட்டங்கள் சில இருக்கின்றன. ஒரு காலக்கட்டத்தில் பிலிப்ஸ் ரேடியோ அங்கிருந்து தான் வந்தன என்று சொல்லுவார்கள். இப்போதும் அது தொடரும், ஐயமில்லை!
நெதர்லாந்து மக்களின் வாழும் காலம் எத்தனை ஆண்டுகள்? சராசரியாக ஆண்களின் வயது 82 ஆகவும் பெண்களின் ஆயுட்காலம் 78 ஆகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. மற்ற உலக நாடுகளோடு ஒப்பிடும் போது இது அதிகம்.
அவர்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதற்கு அவர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார்கள் என்று பொதுவாகச் சொன்னாலும் அவர்களிடம் முதலிடம் வகிப்பது சைக்கள் ஓட்டம் தான்!
நெதர்லாந்தில் மக்கள் தொகையை விட அவர்கள் பயன்படுத்தும் சைக்கள்கள் இன்னும் அதிகம்! கார்கள் இல்லாத வீடுகள் இருக்கலாம் ஆனால் சைக்கள் இல்லாத வீடுகள் இல்லவே இல்லை. பணக்காரர்கள் கூட தூரத்துப் பயணத்திற்காக மட்டும் தான் காரைப் பயன்படுத்துகிறார்கள். அங்குச் சைக்கள்களைப் பார்க்கிங் செய்வதற்குத் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சைக்கள்கள் வாங்க வங்கிகள் கடன் கொடுக்கின்றன!
ஒரு நபரின் வேலை செய்யும் இடம் முப்பது மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் அவர் சைக்களைத்தான் பயன்படுத்துவார். காலையில் வேலைக்குப் போகிறவர்கள் அனைவரும் சைக்களைத்தான் பயன்படுத்துகின்றனர். சைக்கள்களைப் பயன்படுத்துவதில் அவர்கள் பெருமைக் கொள்கின்றனர். அதுவே அவர்களுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமைகிறது.
ஐரோப்பிய நாடுகளில் இப்படி ஒரு கொள்கையாகவே சைக்களை வாகனமாகக் கொண்ட நாடு என்றால் அது நெதர்லாந்து தான். அதுவே ஒரு சிறந்த உடற்பயிற்சியாக அமைகிறது என்பதால் எல்லாருமே சைக்கள் ஓட்டுவதில் அதிக அக்கறைக் காட்டுகின்றனர்.
நம்மைப் பொறுத்தவரை எந்த ஒரு நல்ல காரியத்துக்கும் "நோ!" சொல்லுபவர்கள். அது கூட பரவாயில்லை. கேவலமாக நினைப்பவர்கள்! அதனால் வசதிபடைத்தவர்கள் உடல் பயிற்சிக்காக வீட்டுக்குள்ளேயே சைக்களை ஓட்டுகின்றனர்! அதையே பெருமையாக நினைக்கின்றனர். அதையும் தொடர்ச்சியாக செய்வதில்லை! பெருமைக்காக செய்யும் காரியங்கள் இப்படித்தான் முடியும்!
பெரும்பாலான மலேசியர்களுக்கு உடற்பயிற்சி என்பது சுமையான ஒன்றாகப் போய்விட்டது! தின்று கொண்டிருப்பதையே சுகம் என்று நினைக்கிறனர். அதனால் உடல் பருமனைத் தவிர்க்க முடியவில்லை! உடல் பருமன் கூட பெருமைக்குரிய ஒன்றாக மாறிவிட்டது!
நமது போக்கை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு நாட்டு மக்களே சைக்கள்களை வைத்துக் கொண்டே தங்களது வாழ்நாளையே நீடித்துக் கொண்டிருக்கின்றனர்.
நாமும் நெதர்லாந்து மக்களைப் பின்பற்ற எல்லா சாத்தியங்களும் உண்டு!
No comments:
Post a Comment