Friday 28 January 2022

என்று ஒழியும் இந்த கோரோனா?

 

                                Booster at least 80% effective against severe Omicron

என்று ஒழியும் இந்த கோரனா என்பது மில்லியன் டாலர் கேள்வி!

இந்த முறை குறைந்து காணும்போது "பரவாயில்லை! சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்து விடும்!" என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது புதிதாக ஒன்று வந்து விடுகிறது!

நாம் யார் யாரையோ குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எல்லாரையும் விட பணக்காரர்கள் தான் வலிமையானவர்களாக  இருக்கிறார்கள்! அதாவது உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது!

கோரோனா ஒழிந்து போவதை உலகப் பணக்காரர்கள் விரும்பவில்லை! இன்று உலகில் உள்ள பெரிய பணக்காரர்கள் எல்லாம் மருந்து வியாபாரிகள் தான்.  அவர்கள் அவ்வளவு எளிதில் வியாதிகளை, அதுவும் குறிப்பாக கோரோனாவை,  தங்களது கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க மாட்டார்கள்! எத்தனையோ வியாதிகள் உலக மக்களுக்கு வந்திருக்கலாம். ஆனால் கோரோனா போன்று பணத்தை  அள்ளி அள்ளிக் கொடுத்த வேறு வியாதிகள் எதுவும் இல்லை!

கோரோனாவைப் பற்றிய செய்திகள் எதனையும் நம்பும்படியாகவும் இல்லை!   வருகின்ற செய்திகள் எல்லாம் "வரும்! வராது! தொடரும்! தொடராது! சாவு வரும்! சாவு வராது!"  இப்படியே தான் முடிவில்லாமல்  போய்க் கொண்டிருக்கின்றனவே தவிர ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை!

இப்போது பெரும்பாலான நாடுகள், நம் நாடு உட்பட, ஒரு முடிவுக்கு வந்துவிட்டன.   உலக சுகாதார நிறுவனம் சொல்லுவதை கடைப்பிடிப்போம். அது தான் சிறப்பு. இல்லாவிட்டால் அமரிக்கா, பிரிட்டன் அவைகள் என்ன செய்கின்றனவோ அதனையே நாமும் செய்வோம்.  வேறு என்ன தான் வழி?   கோரோனா என்பது நமது நாட்டுக்கு மட்டும் உரியது என்றால்  நம்மால் எதையாவது செய்ய முடியும்.  இது உலக அளவில் பரப்பப்பட்ட ஒரு வியாதி. அந்த வியாதியைப் பரப்பியவர்கள் வியாதியின் வீரியம் குறைய குறைய அடுத்து ஒன்றை பரப்பி விடுவார்கள். இது சில ஆண்டுகளில் முடிவுக்கு வரும் என்று சொல்லுவதற்கில்லை.

இனி மேல், உண்டோ இல்லையோ, நமது அன்றாடப்பணிகள் தொடர வேண்டும். வியாபார நிறுவனங்கள்  திறக்கப்பட வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். வர்த்தகங்கள் தொடர வேண்டும்.

இங்கு முக்கியமானது நாம் நமது கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும்.  சமூக இடைவெளிகளைப் பின்பற்ற வேண்டும்.  முகக் கவசம் அணிய வேண்டும். முடிந்தவரை இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இது நமது கடமை.  ஏதோ நாம் உயிர்வாழ்வதற்கு இதையாவது கடைப்பிடிப்போம்! இதற்கு மேல் தடுப்பூசி போட வேண்டும் என்றால் அதனையும் செய்வோம்.

கோரோனா ஒழிவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நாமும் கோரோனாவோடு சேர்ந்து வாழ பழகிக்கொள்வோம்!

No comments:

Post a Comment