Monday 3 January 2022

எதுவும் ஆகாதோ!

 

                                            MACC Chief Commissioner Datuk Sri Azam Baki

எதுவும் ஆகப்போவதில்லை! அப்படித்தான் தோன்றுகிறது!

என்னன்னவோ முயற்சிகள் நடக்கின்றன. எதுவும் நடக்கவில்லை. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தைத்  தான் சொல்லுகிறேன்.   அதன் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி மீதான குற்றச்சாட்டு எதுவும் எடுபடவில்லை!

யாராலும் அவரை அசைக்க முடியாத ஒரு பதவியா அது என்பதும் நமக்குத் தெரியவில்லை! அந்த அளவுக்கு அது ஒரு உயர்வான பதவியா? யாருமே அவர் மீது கை வைக்க முடியாத அளவுக்கு அது பெரிய பதவியா?

எல்லாருமே குற்றம் சாட்டுகிறார்கள்! அவரோ யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்பது போல  அவர் பாட்டுக்கு அவர் 'கடமை' யைச் செய்து கொண்டிருக்கிறார்!

என்னடா அரசாங்கம் இது? பொறுப்பற்ற ஒரு மனிதரை பதவியில் வைத்துக் கொண்டு என்னன்னவோ ஆலோசனைகள், அறிவுரைகள் எல்லாம் தாரளமாக அள்ளி அள்ளி விசுகின்றனர். ஆனால் அவரைப் பற்றி பேசப் பயப்படுகின்றனர்! அவர் வகிப்பது பெரிய பதவி. இருக்கட்டுமே!  முன்னாள் பிரதமர் நஜீப்பை சட்டம் விட்டு வைத்ததா? இப்போது நீத்மன்றத்தின் படிகளை ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறரே!

இதிலே இன்னொரு விசேஷம்.  நமது அறிஞர் பெருமக்கள் எல்லாம் எங்கே போனார்கள்? உலகத்துக்கே பாடம் எடுப்பவர்கள் எங்கே போனார்கள்? எது சரி, எது தவறு  என்று துல்லியமாக துலாக்கோல் வைத்து அறிவுரை கூறுபவர்கள்  ஏன் எந்த கருத்தையும் சொல்லுவதில்லை? ஊழல், இலஞ்சம் என்றாலே எங்கோ போய் ஓடி ஒளிந்து கொள்கிறார்களே! தாங்கள் கற்ற நூல்கள் அனைத்தும் இது பற்றி பேசுவதில்லையோ!  அல்லது தங்களுக்கும் இதில் பங்கு உண்டு என்பதால் வாய் திறப்பதில்லையோ!

நாமே ஒரு முடிவுக்கு வந்து விடலாம். சிறிய மனிதன்  எது ஒரு பிழை  செய்தாலும் அவன் மேல் ஆணையம் பாயும்.      அதுவே பெரிய மனிதன்  செய்தால் அரசியல் ஆணயத்தை அடக்கி வைக்கும்!  ஆணையுமே தவறு செய்தால்  ஆணையம் அதிகாரம் பண்ணும்! 

உண்மையில் நமது நாட்டுக்கு ஊழல் தடுப்பு ஆணையம் தேவையா என்று அரசாங்கம் யோசித்துப் பார்க்க வேண்டும். ஊழல் இல்லாத நிர்வாகங்கள் இல்லை!  அரசாங்க அலுவலகங்கள் அனைத்திலும் ஊழல்! ஊழலைத் தடுக்கவும் வழி தெரியவில்லை. அப்புறம் எதற்கு ஊழல் ஆணையம்? 

ஊழல் தடுப்பு ஆணையம் ஊழலைப் பற்றி பேசலாம். அது போதும்! மற்றபடி ஊழலை ஒழிப்போம் என்பதெல்லாம் கனவு! எதுவும் ஆகப் போவதில்லை!                                                                              

No comments:

Post a Comment