Monday 3 January 2022

போனது போனது தான்!

                                  Minister of Unity YB Datuk Halima Binti Mohamed  Sadique

சீக்கிரம் அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என்பதாக செய்திகள் கூறுகின்றன. மூன்று அமைச்சர்களின் பெயர்கள் வெளியேற்றப்படுவர் பட்டியலில் இருக்கின்றன.

மற்றவர்களைப் பற்றி நமக்குக் கவலைப்பட  ஒன்றுமில்லை. நாம் மிகவும் கவலைப்படுவது ஒற்றுமைத்துறை அமைச்சர், டத்தோ ஹலிமாவின் பிரிவு தான்! அவர் போகும் போது சும்மா போகவில்லை.மித்ரா என்னும் இந்தியர் உருமாற்றத்திற்காக  அவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிதிகளோடு அவர் போகிறார்! அவர் போன பிறகு அவரிடம் யாரும் கேள்வி எழுப்ப முடியாது. சட்டம் அனுமதித்தாலும் அரசியல்வாதி அனுமதிக்கமாட்டான்! அப்படிப் பார்த்தால் மித்ராவின் பலனை அனுபவிப்பவர்கள் அரசியல்வாதிகள் தான். ஏழை சமுதாயம் என்று சொல்லி பணக்கார சமுதாயம் அனுபவிக்கிறது!

டத்தோ ஹலிமா  மிகத் 'திறமையான' பெண்மணி. பண விஷயத்தில் மிகவும் கெடுபிடி காட்டுபவர்! பணம் என்று வந்துவிட்டால் எல்லாமே அவருடைய பணம் தான்!

எதிர்கட்சியினர் மக்களவையில் பல கேள்விகள் எழுப்பினர். ஆனால் அவர் எதறகும் பதில் சொல்லவில்லை.  அவர் சொன்ன பதில்கள் எதுவும் பொறுப்பான பதில் இல்லை. மக்களைக் குழப்புகின்ற பதில்! அவர் சின்னப் பிள்ளைகளுக்கு மிட்டாய் காட்டிக் கொண்டிருந்தார்! எது பற்றியும் கவலைப்படவில்லை. ம.இ.கா.வினர் அவர் பக்கம்  நிதியின் பெரும் பகுதி அவர்கள் பக்கம்! அதனால் அவர்கள் வாய் திறக்கக் கூடாது என்று சபதம் எடுத்திருந்தனர்!

அமைச்சர் ஹலிமா தனிப்பட்ட முறையில் செயல்படவில்லை. ம.இ.கா.வினரிடம் அவருக்கு நல்லுறவு இருந்தது. பிரதமர் திறந்த மனதோடு கை நீட்டினார்! ஆம்! நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்கின்ற நல்லிணக்கம் இருந்தது!

அனைவரும் சேர்ந்து இந்தியர்களுக்கு 'பெப்பே' காட்டிவிட்டனர். நம்மால் செய்ய முடிந்தது எல்லாம் கேள்விகள் மட்டும் எழுப்பலாம்! அவ்வளவு தான்! பதில் சொல்ல யாரும் தயராக இல்லை. அது அவசியமும் இல்லை என்று அவர்கள் நினைக்கின்றனர்! நாம் கேள்வி கேட்டால் அவர்கள் ம.இ.கா. தலைவர்களிடம் பதில் சொல்லுவார்கள்!

டத்தோ ஹலிமா அவர்கள் இன்னும் எத்தனை நாளைக்கு அமைச்சராக இருப்பார் எனத் தெரியாது.  ஆனால் மித்ரா அவருக்கும் கைகொடுத்திருக்கும் என நம்பலாம்!

No comments:

Post a Comment