Wednesday 26 January 2022

இது போதாது. இளைஞர்களே!

 

ம.இ.கா. சிலாங்கூர் இளைஞர் பகுதி நல்லதொரு திட்டத்தை அறிவித்திருக்கின்றனர். பாராட்டுகிறோம்!

உணவுகள் தயாரிக்கவும், பானங்கள் தயாரிக்கவும் ஓர் ஆறு மாத   குறுகிய  கால பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்

இந்த பயிற்சியினை  ஓர் அனைத்துலக கல்லூரியுடன் இணைந்து இதனைச் செயல்படுத்துகின்றனர். வாழ்த்துகள்!

மாணவர்களுக்குப் பயிற்சி காலத்தில்  மாத அலவன்ஸாக 400 வெள்ளி வழங்கப்படும் என்பதாகவும்  அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை இளைஞர்கள், இந்த வாய்ப்பினை, பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நமது ஆசை. அதுவும் குறிப்பாக உணவுத் துறையில் ஈடுபட வேண்டும் என இலட்சியமாகக் கொண்டவர்களுக்கு  இது ஒரு நல்ல வாய்ப்பு.

உணவுகள் என்னும் போது உடனே  நமது காக்கா உணவகங்கள் தான் கண்முன்னே நிற்கின்றன! அது தேவை இல்லை.  தங்கும் விடுதிகள் அதுவும் உலகளவில்  புகழ் பெற்ற ஹோட்டல்கள், நாட்டில் உள்ளன. நிறையவே வாய்ப்புக்கள் உண்டு. உலகளவிலும் வாய்ப்புக்கள் உண்டு.

நம்மைச் சுற்றிப் பார்த்தால் பல இளைஞர்கள் எந்தவித பயிற்சியும் இல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.  இவர்களுக்குக் கடைசியில்  பயிற்சி கொடுப்பவர்கள் குண்டர் கும்பல்களாகத்தான் இருக்கும்!

பயிற்சிகள் முக்கியம் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.எனக்குத் தெரிந்த இளைஞன் ஒருவன் மகா மகா மண்டு பையன். எதற்கும் இலாயக்கிலை என்கிற நிலையில் இருந்தவன். ஏதோ ஒரு பயிற்சிக்குப் போய் வந்தான்.  பயிற்சியின் போது ஒரு சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அதுதான் அவனது கல்வி தகுதி! வேறு எந்த சான்றிதழும் இல்லை! ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. தீடீரென ஏதோ ஒரு திறமை வெளிப்பட்டது.  இப்போது அவன் சொந்தத் தொழீல் ஈடுபட்டு பெரிய அளவில் வளர்ந்துவிட்டான்!

அதனால் பயிற்சிகள் கிடைக்கும் போது அதனை ஒதுக்காதீர்கள். ஒன்றுமே தெரியாதவர்களுக்கு இது போன்ற பயிற்சிகள் உதவியாக இருக்கும் என்பது உண்மை.

என்னுடைய ஆலோசனை என்பது ம.இ.கா.வினர் இன்னும் பல பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். பணம் பற்றாக் குறை என்பது இல்லை. அது தான் செடிக், மித்ரா போன்ற நிதிகள் இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக இருக்கும் போது கவலைப்பட ஒன்றும் ,இல்லை.

பயிற்சிகள்  தேர்தல் வரும் போது தான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டும். ம.இ.கா.வினர் இன்னும் பல பயிற்சிகளை இளைஞர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

பயிற்சிகள் தொடர வேண்டும்!

No comments:

Post a Comment