Wednesday 5 January 2022

வர முடியாது பெண்ணே!

 

                                    A girl casually carries her pet lion down the street in Kuwait!

"நீ தூக்கிட்டுப் போனாலும் தூக்காம போனாலும் நா' குதிச்சுகிட்டுத்தான் இருப்பேன்!"

குவைத் நகரில், சபாஹியா வட்டாரத்தில் உள்ள சாலையொன்றில்  நடந்த நிகழ்வு இது. வீட்டின் வளர்ப்புப் பிராணியான இளஞ்சிங்கம் வீட்டிலிருந்து தப்பியோடி சாலையில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தது!

பொது மக்கள் போலிஸாருக்குத் தெரியப்படுத்த,  வீட்டாருக்கும் அப்போது தான் தெரியவர,  அந்த குட்டி சிங்கத்தைத் தேடி ஓடினார் அதன் உரிமையாளரான இளம் பெண்! ஆம்! அதன் உரிமையாளர் அப்பாவும் மகளும் தான்.

பின்னர் என்ன? ஏதோ நாய், பூனைகளைத் தூக்கிக் கொண்டு போவது  போல அந்தப் பெண்  அந்த சிங்கக் குட்டியைத் தூக்கிக் கொண்டு போகிறார்! அந்தக் குட்டியோ வர மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் பண்ணுகிறது! எனினும் கொண்டு போய் விடுகிறார்!

வீடுகளில் வளரும் வளர்ப்புப் பிராணிகளை வளர்க்க நமது நாட்டில் சில நிபந்தனைகள் உண்டு. நினைத்ததெல்லாம் வளர்த்துவிட முடியாது. அது தான் சிறப்பு.  சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகள் வளர்ப்பதற்கு ஏற்ற பிராணிகள் அல்ல. அவைகள் குட்டிகளாக இருக்கும் போது நமக்கும் ஒன்றும் தெரியாது, அவைகளுக்கும் ஒன்றும் தெரியாது.  ஆனால் நீண்ட நாட்கள் நாம் அதனை வளர்ப்புப் பிராணியாக வைத்துக் கொண்டிருக்க முடியாது.

எப்படியோ அந்த இளம் பெண் வீரப்பெண்மணியாகி விட்டார்! நமக்கும் அப்படித்தானே தெரிகிறது!

No comments:

Post a Comment