Sunday 9 January 2022

மூடுவிழா காணுமா அசம்ஷன் பள்ளி?

                                                          Sekolah Kebangsaan Assumptiom

பொதுவாக நீண்டகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பள்ளியை அநாவசியமாக "மூடுகிறோம்!" என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை. நம்மால் முடியவில்லை!  அவர்களால் எப்படி முடிகிறதோ!

பினாங்கு, பட்டர்வொர்த்தில் அமைந்திருக்கும் தேசிய பள்ளியான அசம்ப்ஷன் பள்ளி தான் இப்போது செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கும் பள்ளி.  90 ஆண்டுகளாக நடந்து வரும்  ஒரு பள்ளியை வருகிற பெப்ரவரி மாதத்தில் மூடுகிறோம் என்பது சரியானதாகத் தோன்றவில்லை.  கிறிஸ்துவ பள்ளி என்பதாலேயே அதனை மூட வேண்டும் என்கிற வாதமும் சரியில்லை.

இந்த நேரத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். நான் படித்த பள்ளி கிறிஸ்துவ ஆண்கள் பள்ளி. அருகிலேயே கிறிஸ்துவ பெண்கள் பள்ளி. அந்த இரு பள்ளிகளையுமே வலுக்கட்டாயமாக "மேம்பாட்டுக்காக"  அரசாங்கம் எடுத்துக் கொண்டது. நான் படித்த பள்ளி முற்றிலுமாக உடைத்து நொறுக்கப்பட்டு அங்கே அந்த இடத்தில் பிரமாண்டமான ஐந்து மாடி  ஷாப்பிங் கம்ப்ளக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே இரண்டு மாடிகள் தான் இயங்கின. மூன்றாவது மாடியில் ஒரு சில கடைகள் இயங்கின. பின்னர் இரண்டாவதும் குறைந்து போனது. தரையில் மட்டும் தான் இப்போதும் ஒரு சில இயங்கிக் கொண்டிருக்கின்றன! அந்த பிரமாண்டம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது!  

பெண்கள் பள்ளியில் என்னன்னவோ பிரமாண்டத்தைக் கொண்டு வர நினைத்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை.  இப்போது வெறும் குளம் மட்டும் தான் அங்கு காட்சியளித்துக் கொண்டிருக்கிறது! எப்படியோ காணாமல் செய்து விட்டோமே! அதுவே வெற்றி! அந்தப் பள்ளிகள் எத்தனையோ கல்வியாளர்களை உருவாக்கியப் பள்ளிகள். அத்தனையும் "பொஸ்க்!" என்று போய்விட்டது!

ஏன் அவர்களின் கண்களை அது உறுத்துகிறது? கிறிஸ்துவ பள்ளிகள் நகரின் மையத்தில் இருப்பது கண்களை உறுத்தியது. இப்போது எதுவுமில்லை!  ரொம்பவும் நிம்மதி!

பினாங்கிலும் இத நிலைமையாகத்தான் இருக்க வேண்டும். பெரிய காரணங்கள் இருக்க ஒன்றுமில்லை! கிறிஸ்துவ அடையாளங்கள் இருப்பது பிடிக்கவில்லை. அதற்காக, பாவம், பள்ளிக்கூடமே வேண்டாம்! இவர்கள் மிகவும் அதிபுத்துசாலிகள்!

அசம்ஷன் பள்ளிக்கு என்ன ஆகும்? இப்போது "பாஸ்" கட்சியின் துணையுண்டு! எதுவும் நடக்கும்!

No comments:

Post a Comment