Sunday 30 January 2022

செயல்படாத சங்கங்கள்!

 


விளையாட்டுத்துறை துணை அமைச்சரின் சமீபத்திய அறிவிப்பு நகைப்புக்குரியதாக இருந்தாலும் அதே சமயத்தில் நமக்கு வலியுள்ளதாகவும் இருக்கிறது.

நாட்டிலுள்ள சுமார் 11,000 விளையாட்டுச் சங்கங்களில் 8,000 சங்கங்கள் செயலற்றுக் கிடப்பதாக  அறிவித்திருப்பானது  உள்ளபடியே உண்மை நிலவரத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

கேட்பதற்கு ஏதோ தமாஷான ஒரு செய்தியாக எடுத்துக் கொண்டாலும் அதன் பின்னால் எத்தனை கோடிகள் கைமாறியிருக்கும், எத்தனை கோடிகள் வீணடிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கும் போது மனம் வலிக்கிறது.

பணத்தை வீணடிக்கிற நிலையிலா நாடு இருக்கிறது? இப்போது கொரோனோ வந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இயங்கவில்லை என்றால் மக்களுக்கு வேலை இல்லை. வேலை இல்லை என்றால்  குடும்பத்திற்குச்  சாப்பாடு போட வழியில்லை. பிள்ளைகள் பள்ளிக்குப் போக வழியில்லை. அனைத்து நிலையிலும் நாடு ஸ்தம்பித்து விட்டது. 

அடுத்து வந்தது பெரு வெள்ளம். புயல், காற்று, மழை என்று ஒரு சுற்று வந்தது~ கோடிக்கணக்கில் பணம் விரயம்.  மக்கள் கையில் பணம் இல்லை. பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர்.

மக்கள் கையில் பணம் இல்லை. அரசாங்கத்திடம் பணம் இல்லை. மக்கள் பணத்தை விரயம் செய்ய வேண்டுமென்றே அமைந்த ஓர் அரசாங்கம். அசாங்கத்திடம் பணம் இல்லையென்று சொன்னாலும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது.

எப்படி? இதோ மேலே சொன்னோமே விளையாட்டுச் சங்களுக்கு அள்ளிக் கொடுக்கவில்லை என்று சொல்ல முடியுமா? செயல்படாத சஙகங்களை வைத்து யார் யாரெல்லாம் பணம் சம்பாதித்தார்கள்? அரசியல்வாதிகள் தானே!

பாரிசான் கட்சி ஆட்சியில் இருக்கும்வரை நாடு நாறிப்போகும் என்பது மட்டும் உண்மை. இன்று அந்தக் கட்சியில் இருப்பவர் அனைவருமே ஊழல்வாதிகள் தான்! நேர்மையான ஒருவர் கூட கட்சியில் இல்லாத போது, இந்த நிலையிலும், அவர்கள் ஆட்சியில் அமர வேண்டும் என்று நினைக்கிறார்கள்!  துடிக்கிறார்கள்!

செயல்படாத சங்கங்கள் இனி செயல்பட முடியாது என்று சொன்னாலும் அந்த சங்கங்களுக்காக எத்தனை கோடி இதுவரை செலவு செய்திருக்கிறீர்கள் என்று பொது மக்களுக்குச் சொன்னால் கொஞ்சமாவது மனது நிறைவு கொள்ளும்!

No comments:

Post a Comment