நாட்டில் பிரச்சனைகளுக்குப் பஞ்சமில்லை. ஒரு பக்கம் கோவிட்-19 என்றால் இன்னொரு பக்கம் பெரும் வெள்ளம் வெளுத்து வாங்குகிறது! வெளுத்து வாங்குவது மட்டும் அல்லாமல் வெள்ளம் போகின்ற இடங்களில் எல்லாம் தனது அடையாளத்தை அப்பிவிட்டுச் செல்லுகிறது! சேறு சாகதிகள் மட்டும் அல்லாமல் வெறு பல அடையாளங்கள்! சேறு சகதி என்றால் மேலே சுத்தம் செய்கிறாரே நமது அமைச்சர் அது போன்றது அல்ல! இது தான் சேறு சகதி என்றால் யாருடைய உதவியும் நமக்குத் தேவையில்லையே! நம் வீட்டுப் பெண்களே பார்த்துக் கொள்வார்கள்.
இந்த நிலையில் மேலே நமது அமைச்சரைப் போன்று இன்னும் பலரும் மக்களிடம் "நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்!" என்பதைக் காட்டுவதற்காக அவர்களுக்குத் தெரிந்த சில பல சாகசங்களைச் செய்து வருகின்றனர்.
இதோ அமைச்சர் சுத்தம் செய்கிறார்! அவரைச் சுற்றி ஒரு பெரும் படையே அங்கு உண்டு. காவலர்கள் தவிர்த்து, படம் பிடிக்க, செய்தியைக் கொடுக்க பத்திரிக்கையாளர்கள், தொலைகாட்சியினர் மற்றும் அங்குள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள்! வாரணம் ஆயிரம் புடைசூழ இந்த மாபெரும் சுத்தம் செய்கின்ற வேலையைச் செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர்!
இது போன்ற போலித்தனமான வேலைகளை அரசியல்வாதிகள் செய்வதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்! இது ஒரு தேவையற்ற வேலை! மக்களுக்குத் தேவை இந்த ஏமாற்று வேலை அல்ல! நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். அது போதும். இது ஏமாற்று வேலை என்பது மக்களுக்கும் தெரியும்! யாரும் இந்த உல்டா வேலைகளை யாரும் நம்பப் போவதில்லை! ஆனாலும் செய்கிறீர்கள்!
இது போன்ற ஏமாற்று வேலைகளுக்காகவும் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது! வெறும் சுத்தம் செய்வதோடு போய்விடுமா? அப்புறம் 'டீ வித் ரீனா' நடைபெறும்! அதற்கு ஐயாயிரம், பத்தாயிரம் என்று மொய் எழுதப்படும்! அதை விட இன்னும் பயனுள்ள வழிகளில் உங்கள் நேரத்தை செலவிடலாம். மக்களின் குறைகளைக் கண்டறிந்து அதனைக் களைய முயற்சி செய்யலாம். ஏதாவது ஒரு குடும்பத்தினருக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அது தான் இப்போதைய முக்கிய தேவை.
எந்த சூழ்நிலையிலும் அரசியல்வாதிகள் தங்கள் கைவரிசையைக் காட்டுவதை விடமாட்டார்கள்! அது தான் அவர்களது பண்பாடு!
வீணடிப்பு வேண்டாம்! பண வீணடிப்பு வேண்டாம்! நேர வீணடிப்பு வேண்டாம்! வீணாக நடிக்க வேண்டாம்!
No comments:
Post a Comment