இஸ்லாமிய சமயப் போதகர், ஜாகிர் நாயக் ஒரு கருத்தைச் சொன்னார்.
எங்கிருந்து அவர் அந்த தகவல்களைப் பெற்றார் என்று நமக்குத் தெரியவில்லையே தவிர அது அவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்!
"இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள் ஆனால் மலேசியாவில் உள்ள இந்துக்கள் ஓர் இஸ்லாமிய நாடான மலேசியாவில் சகல சௌபாக்கியங்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! இது அடுக்குமா?" என்பது தான் அவர் கூறிய வார்த்தைகளின் சுருக்கம். அவருடைய ஆதங்கம்.
அவர் சொல்ல வருவதெல்லாம் இஸ்லாமியர்கள் இந்தியாவில் சந்தோஷமாக ஐல்லை! அப்ப்டியிருக்க மலேசியாவில் இந்துக்கள் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? என்பது தான் அவரது கேள்வி.
அதனை வேறு விதமாக சொல்ல வேண்டுமானால் எந்த ஓர் இஸ்லாமிய நாட்டிலும் இஸ்லாமியர் அல்லாதார் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்பதுதான் அவர் சொல்ல வருவது! அதாவது ஓர் இஸ்லாமிய நாட்டில் அனைவரும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டுமே தவிர வேறு மதத்தினர் வாழக் கூடாது என்பது தான் அவரது நோக்கம். அப்படியே இருந்தாலும் அவர்கள் சந்தோஷமாக வாழக் கூடாது என்கிறார் ஜாகிர்!
இருந்தாலும் அவர் சொல்லுவது மாதிரி உலகம் இல்லை! எல்லா நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்து தான் இருக்க முடியும். மனிதர்களும் அப்படித்தான். எல்லா மனிதர்களும், சமயத்தினரும் கூடி தான் வாழ வேண்டும். தனித்து வாழ்வது இயலாத காரியம். ஜாகிர் நாயக்கின் தத்துவம் அவருக்குச் சரியாக இருக்கலாம் ஆனால் மற்றவர்களுக்கு ஏற்புடையதல்ல.
ஜாகிர் நாயக் தனது பேச்சின் மூலம் கலகத்தை உருவாக்குபவர். அது ஏற்கனவே மெய்ப்பிக்கப்ப்ட்டிருக்கிறது. நமது நாட்டிலும் அது நடந்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக, ஜாகிர் நாயக் இப்போது இங்கு நாட்டில் இருக்கும் போதே ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. ஈப்போ, கம்போங் டூசூன் பெர்த்தாம், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தெய்வச்சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. இவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் விடப்படும் இந்த நேரத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.
இவருக்கும் இந்த அடித்து நொறுக்குதலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனாலும் சந்தேகத்திற்கு இடம் இருக்கிற்து அல்லவா! அப்படியே இல்லை என்றாலும் இப்போது இங்குள்ள இந்துக்கள் எவ்வளவு சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதை ஜாகிர் புரிந்து கொண்டிருக்க வேண்டும்!
அடிப்படையற்ற தகவல்களை வைத்துக் கொண்டு மற்ற சமயத்தினரை இழிவு படுத்துவதை ஜாகிர் நாயக் தவிர்க்க வேண்டும்.
எங்கிருந்தாலும் அவரவர் உழைத்துத் தான் தங்களது குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும். பணச் சலவை செய்து சம்பாதிப்பது என்பது கொள்ளையர்களால் தான் முடியும்! எல்லாருக்கும் அது அமைவதில்லை!
No comments:
Post a Comment