நமது நாளிதழ்களில் வரும் சில செய்திகளைப் படிக்கும் போது இந்த சமூகத்தில் என்ன தான் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை!
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் "ஒரு முறைகேடு" போன்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆலயங்களில் முறைகேடு, பொது இயக்கங்களில் முறைகேடு, அரசியல் கட்சிகளில் முறைகேடு என்று ஏதோ ஒரு முறைகேடு தொடர்ந்து வண்ணமே இருந்து கொண்டிருக்கிறது.
இதற்கு முன்னர் நாம் யார் யாரை யோக்கியன் என்று நினைத்தோமோ அவர்கள் எல்லாம் இப்போது அயோக்கியர்கள் பட்டியலில் வந்து விட்டார்கள்! படித்தவன், பெரிய படிப்புப் படித்தவன், கல்வியாளர் என்று யாரை நம்பி நாம் பொறுப்புக்களை ஒப்படைத்தோமோ அவர்கள் எல்லாம் இப்போது நம்பிக்கைத் துரோகிகளாக மாறிவிட்டாளர்கள்!
இந்த சமுதாயத்திற்கு யாராவது ஒருவரைச் சுட்டிக்காட்டி இவர் நல்லவர் என்று சொல்ல முடிகிற அளவுக்கு யாராவது இருக்கிறார்களா? ஏன் படித்தவர்கள் கூட இந்த அளவுக்குத் தரமற்ற் மனிதராக மாறிவிட்டார்கள்?
ஆனால் ஒன்று மட்டும் என்னால் சொல்ல முடியும். தமிழர்கள் இந்த அளவுக்கு தாழ்ந்த மக்கள் அல்ல. அவர்கள் இந்த அளவுக்கு கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்பது மட்டும் உண்மை.
தங்களுக்குப் பதவி வேண்டும் என்பதற்காக தங்களைத் தமிழன் என்று சொல்லுபவர்கள் இன்று நிறையவே இருக்கிறார்கள். இவர்கள் தமிழர்கள் தானா என்பதை உள் புகுந்தா நம்மால் பார்க்க முடியும்! அது அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது! இப்போது இங்கும் ஒரு மாற்றம் வருகிறது. இப்போது அவர்கள் எல்லாம் ஜாதி பெயரைப் போட ஆரம்பித்து விட்டார்கள். அதனால் வருங்காலங்களில் இவர்கள் தமிழர்களா என்பதை எளிதாகக் க்ண்டுப்பிடித்து விட முடியும்.
இப்போது நம்மிடையே நிறையே இயக்கங்கள். ஆனால் அதன் தலைவர்களைப் பாருங்கள். ஒருவன் கூட தமிழனாக இருக்க மாட்டான். இவர்கள் எல்லாம் அரசாங்க மானியம் வாங்குவதற்காகவே தலைவர்கள் ஆனவர்கள்!
யார் தலைவராக இருந்தாலும் சரி. வரவேற்கிறோம். ஆனால் மக்களை ஏமாற்றாதீர்கள். இயக்கத்தின் பேரை வைத்துக் கொண்டு தவறு செய்யாதீர்கள் ஆலயங்களின் பணத்தை அபகரிக்காதீர்கள். திருடாதீர்கள்! கொள்ளையடிக்காதீர்கள்!
சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். அது சிவன் சொத்துக்கு மட்டும் அல்ல. பொது சொத்தும் குல நாசம் தான். கல்வி சொத்தும் குல நாசம் தான். அரசாங்க மானியங்களை அபகரிப்பதும் குல நாசம் தான்.
சமுதாயத்தில் எத்தனை முறை கேடுகள்! எத்தனை கையாடல்கள்! அத்தனைக்கும் மேலாக ஆலய முறைகேடுகள் தலைமுறை முறைகேடுகள்! தலைமுறை வீழ்ச்சியுறும்!
No comments:
Post a Comment