நம்ப முடியாத செய்தி!
இதுவே ம.இ.கா. வினர் யாராவது மீது வந்திருந்தால் அதை நிச்சயமாக நம்பியிருப்போம்! அது ஒரு கொள்ளைக்கார கூட்டம் என்பது முடிந்து போன செய்தி!
ஆனால் இது அப்படி அல்ல. இப்போது பக்காத்தான் அரசாங்கம். அதுவும் ஜ.செ.க. யின் தலைவர்களில் ஒருவரான கணபதிராவ் மீது ஒரு குற்றச்சாட்டு.
கிள்ளான், ஜோஹான் செத்தியா அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு நிலம் கொடுக்கப்பட்டு விட்டதாக சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினரான கணபதிராவ் ஓர் அறிக்கையின் மூலம் அறிவித்திருக்கிறார். இது நடந்தது 2017-ம் ஆண்டு.
அதன் பின்னர் கோயில் நிர்வாகம் 2017 - ம் ஆண்டு முதல் இன்று வரை கோயிலுக்கான பட்டா பெற நடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர்! நில அலுவலகம், மந்திரி பெசார் அலுவலகம், ஆட்சிக்குழு உறுப்பினரான கணபதிராவ் அலுவலகம் - என்று எதனையும் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் எதுவும் நகர்ந்த பாடில்லை!
ஆனால் புதிதாக ஒரு நிகழ்வு யாரும் எதிர்பாராத வகையில் நடந்துள்ளது. கோயில் கட்டப்படும் என்று எதிர்பார்த்த நிலத்தில் இப்போது அந்த நிலம் சீன இயக்கம் ஒன்றிற்குக் கொடுக்கப்பட்டிருப்பதாக உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஆலயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் இப்போது சீன மொழிப் பெயர் பலகை ஒன்று நடப்பட்டு அது சீனர்களுக்குச் சொந்தமான நிலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது!
இது தான் இன்றைய நிலை. நம்மைப் பொறுத்தவரை சராசரி மனிதர்களாகிய நாம் என்ன நினைப்போம்? "ஒரு அடி அடிசிட்டாண்டா! சீன்ப் பயல்களிடமிருந்து பணத்தை அடிச்சிட்டாண்டா!" என்று நாம் நினைப்பது இயல்பு தான்! ஆனால் உண்மை என்னவென்று தெரியவில்லை. அதனால் எடுத்த எடுப்பில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. நமக்கு ஒரு பக்கத்து நியாயம் தான் தெரியும். இன்னொரு பக்கமிருந்து ஏதேனும் அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இப்போதைக்கு கணபதிராவ் குற்றமுள்ளவராகத் தெரிகிறார். கோயில் தரப்பு சொல்லுகின்ற காரணங்களைப் பார்த்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏன் அவரிடமிருந்து எந்த விதமான பதிலும் நிர்வாகத்தினருக்குத் தரவில்லை என்று கேள்வி எழுகிறது!
பொதுவாகவே ஒன்று நமக்குப் புரிகிறது. இந்தியர்கள் என்றால் கடந்து போன ஆட்சியும் சரி இன்றைய ஆட்சியும் சரி "திடாப்பா!" என்கிற மனநிலை ஆட்சியாளர்களுக்கு உண்டு! அப்போதும் உண்டு! இப்போதும் உண்டு!
ம.இ.கா. வினரை எப்படி கொள்ளைக்காரர்கள் என்றோமோ இப்போது இவர்களும் அதனை நோக்கியே செல்லுகிறார்களோ என்று நினைக்க வேண்டியுள்ளது! ஆனாலும் இவர்கள் மேல் இன்னும் நமக்கு நம்பிக்கை உண்டு.
நம்பத்தான் முடியவில்லை! நம்புவோம்!
No comments:
Post a Comment