சமீபத்தில் நமது பிரதமர், டாக்டர் மகாதிர் "பறையர்" என்று ஒரு சொல்லைப் பயன்படுத்தியது சரியல்ல என்பதாக நாம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறோம்.
அது சரியா, தவறா என்று இங்கு நாம் விவாதிக்கப் போவதில்லை.
நாம் அந்த வார்த்தையைப் பயன்படுத்தும் போது தமிழில் நாம் என்ன சொல்லுகிறோமோ, தமிழில் என்ன அர்த்தத்தில் பயன்படுத்துகிறோமோ அது தான் நமது உடனடி ஞாபத்திற்கு வருகிறது.
இங்கு தான் பிரச்சனையே ஆரம்பம். இப்போது அந்தச் சொல்லின் அர்த்தம் மாறி விட்டது. உல்களவில் பயன்படுத்தும் ஒரு சொல்லாக அது இன்று திகழ்கிறது.
ஆங்கிலத்தில் பயன்படுத்தும் ஒரு சொல். அது மூலம் என்ன, வேர்ச் சொல் என்ன என்கிற விபரம் நமக்குத் தெரியாது. எத்தனையோ ஆங்கிலச் சொற்களை நாம் பயன்படுத்துகிறோம். அதன் மூலம் என்ன என்கிற ஆராய்ச்சியெல்லாம் நமக்குத் தேவை இல்லாதது. அது போலவே இந்தச் சொல்லும்.
ஆங்கிலத்தில் அது சொல்லுப்படும் போது அதன் பொருள் வேறு. அதனை நாம் நமது அர்த்ததிற்குக் கொண்டு வரத் தேவையில்லை. ஆனால் அதனையே ஓர் இந்தியன் இன்னொரு இந்தியனைப் பார்த்து சொல்லுகிறான் என்றால் அதன் அர்த்தம் வேறு. அவன் நம்மை கேவலப்படுத்துகிறான்.இழிந்தவனாக நினைக்கிறான். அவமானப் படுத்துகிறான் என்பதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம்ஆப்பரிக்க கறுப்பர்களை பொதுவாக"நீகிரோ" என்கிறோம். நீகிரோ என்னும் சொல் ஏதோ ஒரு வகையில் அவர்களைப் புண் படுத்துகிறது. அவர்கள் கறுப்பர்கள் என்று சொல்லுவதையும் விரும்பவில்லை. ஆனால் நாம் அதனைக் கண்டோமா? நாம் நமக்குள்ளே நீகிரோ என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்! ஆங்கிலத்தில் அவர்களிடம் பேசும் போது கறுப்பர் என்றும் நம்மால் சொல்ல முடியவில்லை! நீகிரோ என்றும் நம்மால் சொல்ல முடியவில்லை, நாகரிகம் கருதி! ஆனால் அவர்கள் விரும்புவதோ "நான் அமரிக்கன், நான் நைஜீரியன் - இப்படித்தன் அவர்கள் அழைக்கப்பட விரும்புகிறார்கள்.
செட்டி என்றால் அது செட்டியார்களைத் தான் குறிக்கும். ஆனால் இன்று? செட்டி என்றால் ஆலோங் அல்லது கந்து வட்டிக்காரன் என்பதைத் தான் குறிக்கும்! ஆனால் இதையெல்லாம் நாம் கண்டு கொள்ளுவதில்லை!
நாம் சொல்ல வருவதெல்லாம் "பறையர்: என்னும் சொல்லை ஒரு ஆங்கில வார்த்தையாகவே எடுத்துக் கொள்ளுங்கள். அதனை தமிழில் மொழி பெயர்க்காதீர்கள். மொழி பெயர்த்தால் நாம் வேதனையுற வேண்டி வரும்.
நணபர்களுக்கு ஒரு வேண்டுகோள்: முடிந்த வரை இந்தியர்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். தமிழாகவும் வேண்டாம். ஆங்கிலமாகவும் வேண்டாம். நமக்குள்ளே பேசி அதனை ஏன் பிரபலப்படுத்த வேண்டும்? பிற இனத்தவர் பேசும் போது அதனைப் பெரிது படுத்தாதீர்கள். விட்டுத் தள்ளுங்கள்!
அர்த்தம் மாறித் தான் போனது! ஏற்றுக் கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment