அரசாங்கம் என்ன தான் இந்தியர்களின் மேம்பாட்டுக்காக பல நிதி ஒதுக்கீடுகளைச் செய்தாலும் அது என்னவோ நம்மிடம் வந்து சேருவதில்லை! என்ன சாபக்கேடோ தெரியவில்லை. ஏதாவது கோமாளிகள் இடை இடையே வந்து சேர்ந்து விடுகிறார்கள்! இந்தக் கோமாளிகள் எல்லாம் கோமான்களாக ஆக வேண்டும் எனும் வேட்கை இருப்பதால் ஒதுக்கப்பட்ட பணம் நம்மை விட்டு ஒதுங்கிப்போய் விடுகிறது!
"செடிக்" தான் அப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது என்றால் இப்போது "மித்ரா" வுக்கும் அதே நிலை தானா என்று யோசிக்க வேண்டியுள்ளது. உரியவர்கள் சரியான பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறார்கள்.
மித்ராவை பற்றை ஒரு கேள்வி எழுப்பினால் அதற்கான பதிலைச் சொல்ல அமைச்சர் வேதமூர்த்தி கடமைப்பட்டிருக்கிறார். அவர் வேறு ஒரு இயக்கத்தைப் பற்றி கேள்வி எழுப்புவது அவர் தனது கடமையில் இருந்து தவறுகிறார் என்றே நினைக்க வேண்டியுள்ளது.
தவறுவது மட்டும் அல்ல ஏன் தடுமாறுகிறார் என்று நாமும் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. வேதமூர்த்தி நேர்மையான மனிதர் என்று பொதுவாகவே அவர் மீது ஓர் அபிப்பிராயம் உண்டு. அப்படி ஓர் அபிப்பிராயத்தின் மீது நமக்கே கொஞ்சம் சந்தேகம் ஏற்பட வைக்கிறது அவரது நடவடிக்கை.
பொதுவாக அரசியல் என்றாலே நமக்குத் தெரியும். நேர்மையாளர்கள் குறைவாகவே இருப்பார்கள்! இப்போது ஓர் நேர்மையற்ற ஆட்சியை வீழ்த்தி பக்காத்தான் கூட்டணியைப் பதவியில் அமர்த்தியிருக்கிறோம். பதவிக்கு வந்தவ்ர்கள் உடனடியாக த்ங்களது கைவரிசையைக் காட்ட மாட்டார்கள்! அத்ற்கெல்லாம் நாள் பிடிக்கும்! மற்றபடி இவர்கள் உத்தமர்கள் என்று நாம் நம்ப வேண்டியதில்லை!
வேதமூர்த்தி புதிதாக ஓர் அரசியல் கட்சியை ஆர்ம்பித்திருக்கிறார். அவருக்கும் பணத் தேவை உண்டு. ஆனால் இதற்கும் அதற்கும் முடிச்சுப் போட தேவை இல்லை.
ஆனால் கேள்வி எல்லாம் ஏன் இப்படி நம்மை யோசிக்க வைக்கிறார் என்பது தான்! இயக்கங்கள், மன்றங்கள், அமைப்புக்கள். நிலையங்கள் - இப்படி எதுவாக இருந்தாலும் ஒருவரிடமே மொத்தமாக பல இலட்சங்கள், பல கோடிகள் என்றால் சந்தேகங்கள் வரத் தான் செய்யும். வாங்கியவர்கள் ஏற்கனவே "செய்திகளில்" அடிபட்டவர்கள்!
நேரடியாக பணத்தை வெளியாக்க முடியாது என்பதிலும் சரியாக இல்லை. வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எப்படிக் கடன் கொடுக்கப் போகிறீர்கள? தொழிலை மேம்படுத்த நினைப்பவர்களுக்கு எப்படி உதவ முடியும்? அதனை நீங்கள் நேரடியாகத் தான் செய்ய முடியும்.
"மித்ரா" மூலம் நல்லது நடக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த சமுதாயம் பயனுறும் என எதிர்பார்க்கிறோம். வெட்டிப்பேச்சுப் பேசிக் கொண்டும், நீயா நானா போட்டிப் போடவும் இங்கு இடம் இல்லை! அதை நீதிமன்றத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
மித்ரா எந்தத் தடையும் இல்லாமல், தனது பணியைத் தொடர வேண்டும்!
No comments:
Post a Comment