இனி வரப் போகும் காலங்களில் ம.இ.கா. வினர் எப்படி கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்கள் என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது.
சமீபத்தில் ம,இ,கா,வின் தேசிய தலைவர், டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கிப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். "சரி, நாங்கள் தான் ஜாவி எழுத்துக்கு ஒப்புதல் கொடுதோம்! அதனாலென்ன? இப்போ நீங்கள் தானே ஆட்சியில் இருக்கிறீர்கள், எடுத்து விடுங்களேன்!"
பரவாயில்லை! சரியாகவே பேசியிருக்கிறார். அவருடைய நிலையிலிருந்து அதை விட வேறு மாதிரியாக வேறு யாராலும் பேசியிருக்க முடியாது என்பது உண்மை தான்!
இனி மேலும் அவருக்குப் பல கேள்விகள் வரும். அதனை அவர் எப்படி சமாளிப்பார் என்று யோசித்துப் பார்த்தால் எப்படி அவரிடமிருந்து பதில் வரும் என்று ஓரளவு ஊகிக்கலாம்!
கேள்வி: மைக்கா ஹோல்டிங்ஸ் பிரச்சனை எப்ப தான் முடிவுக்கு வரும்?
பதில்: இந்தக் கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? சாமிவேலு காலத்தில் கேட்க வேண்டிய கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? அப்போதே அவரிடம் கேட்டிருந்தால் எப்போதோ இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருக்குமே! இப்போது நீங்கள் தானே ஆட்சியில் இருக்கிறீர்கள்! முடித்து விடுங்களேன்!
கேள்வி: பேரா மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்காக கொடுக்கப்பட்ட இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை ம.இ.கா.வினர் திருடி விட்டார்களாமே!
பதில்: திருடும் கட்சி அல்ல நாங்கள்! எங்கள் ஆட்சியில் இந்திய பள்ளிகளுக்காக கொடுக்கப்பட்ட நிலம் அது! நாங்களும் இந்திய பள்ளிகளுக்காகத் தான் கொடுக்க நினைக்கிறோம்! அந்த நாள் இன்னும் வரவில்லை!
இது போன்று நிறைய கேள்விகளுக்கு ம.இ.கா. தலைவர் பதில் சொல்ல வேண்டி வரும். அதற்கெல்லாம் அவரிடம் உடனடியான பதிலை வைத்திருப்பார் என எதிர்பார்க்கிறோம்.
ம.இ.கா. வினர் பல்துறை விற்பன்னர்கள்! எல்லாக் கேள்விகளுக்கும் அவர்களிடம் பதிலுண்டு! சாமிவேலுவிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆயிற்றே!
அவர்கள் எந்தக் காலத்திலும் கீழே விழ மாட்டார்கள்! செல்லாக்காசு ஆன பிறகு விழ என்ன இருக்கிறது?
"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி
மக்களின் மனதிலே நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்"
பேசுங்கள்! எப்படியாவது பேசுங்கள்! சரித்திரம் உங்களை தரித்திரம் என்று பேசும்! அதை மறவாதீர்கள்!
No comments:
Post a Comment