வெறுப்பூட்டுகிறது என்பது உண்மையே!
பி.கே.ஆர். தலைமைச் செயலாளர் சைபுடின் நாசுத்தியோன் இந்தக் கருத்தை வலியுறுத்திருக்கிறார். தொடர்ந்தாற் போல பிரதமர் பதவியைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது மக்களிடையே வெறுப்புணர்வையே ஏற்படுத்தும் என்பதாகக் கூறியிருக்கிறார்.
இப்போது என்ன நாட்டில் பிரதமர் பதவிக்கு மட்டும் தானா பிரச்சனை! எத்தனையோ பிர்ச்சனைகள. இப்போது நம் கண் முன்னே உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். மக்களுக்குத் தேவையான அன்றாடப் பிரச்சனைகள் பல உண்டு.
பொதுத் தேர்தலில் வாக்களிக்கப்பட்ட எத்தனையோ பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்பட்ட பாடில்லை. காரணங்கள் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோமோ தவிர தீர்வுகள் காணப்படவில்லை.
அது சரி, இந்த அடுத்த பிரதமர் பிரச்சனையை எழுப்புவர்கள் யார்? அடுத்த பிரதமராக அன்வார் இப்ராகிம் வருவதை விரும்பாதவர்கள் தான் முழுமையான காரணம். அவர் பதவிக்கு வருவதை விரும்பாதவர்கள் தான் தொடர்ச்சியாக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர்!
அவர்கள் சொல்லுவதெல்லாம் டாக்டர் மகாதிர் தனது பதவி காலத்தை அடுத்த தேர்தல் வரை தொடர வேண்டும் என்பதும் ஒரு காரணம். இன்னும் பல காரணங்கள் உண்டு.
இந்த பிரதமர் என்னும் பதவியை ஒப்படைப்பது என்பது ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு பிரச்சனை. அவ்வளவு தான்! அப்போதெல்லாம் இந்த எதிர்ப்பாளர்கள் எங்கே போனார்கள்? இப்போது இந்த எதிர்ப்பாளர்கள் ஆளுங் கூட்டணியில் இருக்கிறார்கள். அன்று வாய்த் திறக்காதவர்கள் இன்று துணிவோடு வாயைத் திறக்கிறார்கள். அப்படி என்றால் இவர்களுக்கு அந்தத் துணிவைக் கொடுத்தவர்கள் யார்?
எதிர்ப்பாளர்கள் இருப்பது அதிசயமல்ல. ஆனால் இவர்கள் அரசாங்கம் தங்களது கடமைகளைச் செய்ய விடாமல் தடங்களாக இருப்பது தான் நமக்கு வருத்தம் அளிக்கிறது!
நாட்டில்"அடுத்த பிரதமர் யார்?: என்பது முடிந்த விஷயம். அதனையே பேசிக் கொண்டிருப்பது மக்களுக்கு வெறுப்பூட்டும் விஷயம் தான். வேறு வேலையே இல்லையா என்று மக்கள் கேட்கத்தான் செய்கிறார்கள்> ஆனால் இதைத் தான் ஒரு சாரார் விரும்புகிறார்கள்! மக்கள் வெறுக்க வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கம். ஆனால் டாக்டர் மகாதிர் கட்சியில் உள்ளவர்களே இதனைச் செய்கிறார்களே! தினசரி ஏதாவது அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்களே! இவர்களே இப்படி செய்தால் நாம் என்ன நினைப்பது? டாக்டர் மகாதிரின் ஆதரவு இவர்களுக்கு இருக்கிறது என்று தானே நினைக்க வேண்டியுள்ளது!
எது எப்படி இருந்தாலும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். மக்கள் வெறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அம்னோ பாஸ் கட்சிகளின் எதிர்ப்பு என்பதை மக்கள் அலட்சியப் படுத்தி விடுவார்கள்! ஆனால் ஆளுங்கட்சியில் உள்ளவர்களே இது பற்றி பேசிக் கொண்டிருந்தால்? இது திட்டம் இட்டு செய்கின்ற வேலை என்பது தானே பொருள்!
வெறுப்புணர்ச்சியை வளர்க்க வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்!
No comments:
Post a Comment