நம் வாழ்க்கைப் பயணத்தில் பல அதிசயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஏன், நம்மைச் சுற்றிக் கூட பல அதிசயங்கள் நிகழலாம். அவைகள் நமது காதுகளுக்கு எட்டவில்லை என்பதைத் தவிர மற்றபடி அவைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
அது போல இதுவும் ஓர் அதிசயம் தான்.
மேற்கு நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டின் ஒரு கிராமத்தில் ஓர் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தக் கிராமத்தில் கடந்து பத்து ஆண்டுகளில் ஒரு ஆண் குழந்தை கூட பிறக்கவில்லையாம்! எல்லாம் பெண் குழந்தைகளின் ராஜ்ஜியம் தானாம்!
இந்த அதிசயம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது! சமீபத்தில் நடந்த ஒரு போட்டியின் போது அந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் பெண் குழைந்தைகள் தானாம்! அதன் பிறகு தான் அதிகாரிகள் இது பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்! மருத்துவர்கள் இது பற்றி ஆராய்ச்சி செய்ய நகர மேயர் அனுமதி கொடுத்திருக்கிறாராம்.
இந்த நேரத்தில் வேறொன்றும் நமக்கு ஞாபத்திற்கு வருகிறது. இந்தியா, கேரள மாநிலத்தில் ஒரு கிராமத்தில் இரட்டைக் குழந்தைகளாகவே பிறந்து ஓர் அதிசயத்தை உருவாக்கி விட்டார்கள்! அது ஏன் என்றெல்லாம் நமக்கும் புரியவில்லை, அவர்களுக்கும் புரியவில்லை! இந்த செய்தி வந்து ஒரு சில ஆண்டுகள் ஆகிவிட்டதால் நிச்சயமாக அது பற்றியான ஆராய்ச்சிகள் நடந்திருக்கும். இன்றைய நிலைமை தெரியவில்லை.
முதலைகளைப் பற்றி நமக்குத் தெரியும். எந்த அளவுக்கு ஓர் ஆபத்தான விலங்கு என்பது தெரியும். ஆனால் ஆப்பிரிக்க நாட்டு கிராமம் ஒன்றில் ஓர் அதிசயம் நடக்கிறது. அந்த கிராமத்தில் உள்ள ஏரி ஒன்றில் சிறியவர், பெரியவர் என்று எந்தப பாகுபாடுமின்றி அந்த ஏரியில் உள்ள முதலைகளின் மேல் சவாரி செய்கின்றனர்! விளையாடுகின்றனர்! ஆடுகின்றனர்! ஓடுகின்றனர்! பாடுகின்றனர்! அந்த முதலைகள் எதுவும் செய்வதில்லை! அந்த முதலைகள் தங்களது காவல் தெய்வம் என்கிறனர் அந்த கிராம மக்கள்! ஆமாம் அந்த தெய்வ முதலைகள் அங்கு மட்டும் தான்! அந்த ஏரியோடு சரி! அதற்கு அப்பால் அவைகளுக்கு அந்த தெய்வ குணம் இருப்பதில்லை!
சமீபத்தில் படித்தது. தமிழ் நாட்டு கிராமம் ஒன்றில் தங்களுக்கு இனி பெண் குழந்தைகள் வேண்டாம் ஆண் குழைந்தைகள் தான் வேண்டும் என்றால் ஒரு வினோதமான பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். பிறக்கும் கடைசி பெண் குழைந்தைக்கு "வேண்டாம்" என்று பெயர் வைப்பார்களாம். இது போன்ற "வேண்டாம்" என்னும் பெயரில் பல பெண்கள் அந்த கிராமத்தில் இருக்கிறார்களாம்! ஆமாம் அது அவர்களுக்கு சரியாக வேலை செய்கிறது என்றால், தொடரட்டுமே! நமக்கு என்ன கவலை!
இப்போதைக்கு ஞாபகத்தில் உள்ள ஒரு சில அதிசயங்கள் தான் இவை! மற்றவை பின்னர் பார்ப்போம்!
No comments:
Post a Comment