Wednesday 10 February 2021

ஏன்? இப்போது புரிகிறது?

 ஒரு சில முக்கிய பொறுப்புகளை மலாய்க்காரருக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று அம்னோ அரசியல்வாதிகள் கூறுவது ஏன் என்பது இப்போது நமக்குப் புரிகிறது!

முன்னாள் சட்டத்துறைத் தலைவர்,  டோமி தோமஸ் எழுதிய புத்தகத்திற்குப் பிறகு தான் நமக்கு இந்த இரகசியம் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது1

மலாய்க்காரர் ஒருவர் பதவியில் இருப்பது அரசியல்வாதிகள் தங்கள் நலனுக்கு நல்லது என்று நினைக்கிறனர். தாங்கள் சொல்லுவதைக் கேட்க ஓர் ஆள் தேவை என்பதில் அவர்கள் அதிக அக்கறைக் காட்டுகின்றனர்.

 சட்டத்துறைத் தலைவராக  ஒரு மலாய்க்காரர் இருந்தால் அவர்களை எப்படித் தங்களுக்காக, தங்கள் நலனுக்காக, தங்கள் சுயநலனுக்காக, தாங்கள் செய்யும் தவறுகளுக்காக, அரசாங்கத்தை ஏமாற்றும் செயல்களுக்காக எப்படி அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்  என்பதற்காக தங்களைச் சார்ந்த இனத்தவர் ஒருவர் இருப்பது தான் நல்லது என்று அவர்கள் நினைக்கின்றனர்! அவர்கள் ஒருவருக்கு ஒருவர் 'விட்டுக்கொடுத்துப்' போவது எளிது என்று அவர்கள் நினைக்கின்றனர்.

இதைத்தான் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரும் உறுதிபடுத்தியிருக்கிறார்!  தான் தெர்ந்தெடுத்த முன்னாள் சட்டத்துறைத் தலைவர்கள் ஒரு சில விஷயங்களில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்பதாக அவர் கூறியிருக்கிறார்.  குறிப்பாக முன்னாள் பிரதமர் நஜிப்பின் ஊழல் விஷயத்தில்!

சட்டத்துறைத் தலைவர்களின் நடவடிக்கைகளைப் பின் நோக்கிப் பார்க்கும் போது இந்த 'விட்டுக்கொடுத்துப்' போவது என்பது தொடர்ந்தாற் போல்  நடந்து கொண்டு தான் வந்திருக்கிறது!

ஆனால் பொது மக்களுக்கு அது புரியவில்லை. ஏதோ இன விவகாரம் பேசுவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்!

அடாடா! இந்த அரசியல்வாதிகளுக்கு உள்ள மூளை உலகத்தில் யாருக்குமே இல்லாத மூளை! அது எப்படி வேலை செய்யும் என்பது அவ்வளவு எளிதாக யாருக்கும் புரியாது.

ஓர் அரசியல்வாதி என்றால் அவனுக்கு நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று, சமயப்பற்று - எதுவுமே இல்லாத ஒரு ஜீவன்! அவனுக்குத் தெரிந்தது எல்லாம் பணம்! பணம்! பணம்! இவ்வளவு சம்பாதிப்பவன் கடைசியில் மூலையில் முடங்கிப் போவதைத் தவிர அவனுக்கு எதுவும் மிஞ்சப் போவதில்லை!

ஒரு சில விஷயங்கள் மலேசிய அரசியலில் நமக்குப் புரிவதில்லை.   அதனைப் புரிய வைத்துவிட்டார் டோமி தோமஸ் தனது புத்தகத்தின் மூலம்!

No comments:

Post a Comment