Wednesday 24 February 2021

குரல்வளை நெரிக்கப்படுகிறது!

                        
                                    தலைமை நிர்வாக அதிகாரி பிரமேஷ் சந்திரன்

இப்போது எல்லா இணைய தளங்களும் கொஞ்சம் அதிகமாகவே வாசகர்கள் எழுதும் கடிதங்களின் மேல் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது!

கடந்த வாரம், வாசகர்கள் எழுதிய கருத்துகள் நீதி மன்றத்தை அவமதித்தாகக்  கூறி,  நீதிமன்றம்  "மலேசியகினி"  இணைய தளத்திற்கு 5,00,000 இலட்சம் வெள்ளி அபராதத்தை விதித்திருக்கிறது.

இப்படி ஒரு தண்டனை, அதாவது வாசகர் எழுதிய கருத்துகளுக்காக,  ஓர் இணைய தளம் ஐந்த இலட்சம் வெள்ளியைத்  தாரை வார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது இதுவே முதல் தடவை!

ஓர் இணையதளத்திற்கு இந்த அளவு தொகையை அபராதமாக போட்டது என்பது மிகக் கொடுமையானது என்பதே பொதுவான கருத்து.

இணையதளங்கள் எந்த வகையிலும் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதில்லை. இலஞ்சம் பெறுவதில்லை.

அரசியல்வாதிகளுக்கு எந்த அளவு தண்டனையாக இருந்தாலும் அதனை அவர்களால் கட்ட இயலும்! சமீபத்தில் கூட ஓர் பெண் அமைச்சர் தான் கட்ட வேண்டிய பணத்தைக் கட்ட முடியாத சூழலில் திடீரென, சிறைத் தண்டனையைத் தவிர்க்க, அதனை அவர் எந்த பிரச்சனையுமின்றி அந்த கடனைக் கட்டி முடித்தார்! இது அரசியல்வாதிகளால் முடியும்!

ஆனால் பத்திரிக்கையாளர்களுக்கு இப்படி கடுமையான தண்டனையைக் கொடுப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை தான். என்ன செய்வது? அதிகாரம் வலிமையானது. அவர்கள் எதனையும் செய்வோம்  என்கிற மனநிலையில் இருப்பவர்கள்! அப்படித்தான் இருப்பார்கள்!

அதிர்ஷ்டவசமாக  மலேசியாகினி பெரும் வாசகர் வட்டத்தைக் கொண்ட ஒர் இணைய இதழ்.  அதனால் தனது வாசகர்களிடம் வசூலுக்காக அறைகூவல் விடுத்தபோது அடுத்த ஐந்து மணி நேரத்தில் வாசகர்கள்  5,00,000 வெள்ளியைக் கொடுத்து தீர்த்து விட்டார்கள்! எந்த ஒரு சிக்கலும் அவர்களுக்கு ஏற்படவில்லை! மூன்று நாள்களில் பணத்தை  நீதிமன்றத்தில் கட்ட வேண்டும் என்கிற கட்டளையையும்  நிறைவேற்றிவிட்டார்கள்!

எனினும் பத்திரிக்கைகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்பது மறக்கப்படவில்லை; மறுக்கப்படவுமில்லை!

No comments:

Post a Comment