Saturday 6 February 2021

இது தவறான உதாரணம்!

 செர்டாங் பகுதியில் காவால்துறையைச் சேர்ந்த காவல்துறைத் தலைவர் ஒருவர் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என கைது செய்யப்பட்டிருக்கிறார்! 

மிகவும் வேதனைக்குரிய செய்தி. ஒரு தலைவரே இப்படி இருக்கிறார் என்றால் அவருடன் வேலை செய்யும் மற்ற அதிகாரிகளின் நிலை என்ன என்னும் கேள்வி எழுகிறது. 

வேலியே பயிரை மேய்கிறது என்பார்கள். அது இது தான். இதைவிட வேறு  எடுத்துக்காட்டுகள் தேவை இல்லை.

கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு தனியார் விருந்தில் அந்த காவல்துறைத் தலைவரும் அவருடன் இன்னும் ஏழு காவல்துறையைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் அவர்கள் பரிசோதனைக்குள்ளாயினர்.

அந்த தலைவர் ஷாபு போதைப்பொருள் உட்கொண்டிருப்பதை சோதனைக்குப் பின்னர்  உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் மற்ற எழுவரும் போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை.

அந்த காவல்துறை அதிகாரி இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இது தான் முதல் முறையாக காவல்துறையில் ஏற்பட்ட சம்பவம் என்று சொல்வதற்கில்லை. ஏற்கனவே நடந்தவைகள் தான். இப்போதும் நடந்து கொண்டு தான்  இருக்கின்றன.

ஆனால் அவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளாக இருப்பதில்லை. ஆனால் இப்போது அதுவும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன!

இது ஓர் ஆபத்தான்  சூழல். மிகவும் கண்டிக்கத் தக்க ஒரு செயல். அதிகாரிகள், தலைவர்கள் இப்படி இருந்தால் அவருக்குக் கீழ் பணிபுரிபவர்கள் எப்படி இருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை!

இவர்களைப் போன்று போதைபித்தர்களான  அதிகாரிகள் கையில் ஓர் நிரபராதி அகப்பட்டாலும் தாங்கள் விரும்பியபடி தண்டனையைக் கொடுத்து விடுவார்கள்! சிறைகளுக்குள் சட்டம் அவர்கள் கையில்!

நிச்சயமாக இது ஒரு இக்கட்டான சூழல்.  ஆனால் காவல்துறை இவர்களை எப்படிக் கையாள்வது என்பது தெரியும். சட்டப்படி அவர்களும் தண்டனைகளை எதிர் நோக்க வேண்டி வரும்.

யாராக இருந்தாலும், தவறு செய்தால், தண்டனை பெறுவர். அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் இந்த தலைவர் போன்றவர்கள் காவல்துறைக்குத் தவறான உதாரணம் என்று சொல்லுவதில் தப்பில்லை!

No comments:

Post a Comment