Wednesday 17 February 2021

திராவிடமா? எங்கிருந்து வந்தது?

 மலேசிய இந்து சங்கத்தின் அறிக்கை நம்மை அதிர வைக்கிறது!

பள்ளிகளில் திராவிடக் கொள்கைகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறு இந்து சங்கம் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இது தொடர்ந்து 2016 - ம் ஆண்டிலிருந்து தமிழ் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குப் பரப்பட்டு வருவதாக அந்த செய்தி கூறுகிறது. அப்படியென்றால் இத்தனை ஆண்டுகள் பொறுத்தவர்களுக்கு இப்போது என்ன ஆயிற்று என்று நமக்கும் இந்து சங்கத்திடம் கேட்கத் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் நீங்கள் ஏற்றுக் கொண்ட இந்த கருத்தை இப்போது மறுப்பதற்கு என்ன காரணம்?   அதில் இந்து சங்கத்திற்கும் பங்கு உண்டு என்று தான் நாமும் நினைக்கிறோம்.

பொதுவாக திராவிடம், திராவிடர் என்பதே நமக்குத் தேவையில்லாத ஒரு சர்ச்சை.  இங்கு யாரும் திராவிடர்கள் இல்லை.  நமது நாட்டில் தமிழர், தெலுங்கர், மலையாளிகள் உண்டு. இந்த மூன்று இனத்தவரையும் தென் இந்தியர் என்று தான் பொதுவாக சொல்லப்படுகின்றார்கள். திராவிடர் என்று சொல்லப்படுவதில்லை.

நமக்குத் திராவிடமும் வேண்டாம், தென் இந்தியரும் வேண்டாம். வெறும் தமிழர், தெலுங்கர், மலையாளிகள் - இதுவே போது. எந்த குறைபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசாங்கமும் அதனைத்தான் கூறுகிறது.  நாமும் அப்படியே இருப்போம். ஒரு பிரச்சனையும் இல்லையே!

திராவிடர் என்கிற சொல்லே தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படவில்லை.  அது தமிழ்ச்சொல்லே அல்ல, அது சமஸ்கிருதச் சொல் என்கிறார்கள் அறிஞர்கள். அதே போல அது தெலுங்கு, மலையாள இலக்கியங்களிலும் இல்லாத ஒரு சொல்.

அதனை ஏன் வலுக்கட்டாயமாக ஒரு சாரார் தேவையின்றி நமது நாட்டில் அந்தச் சொல்லை பாடப்புத்தகங்களில் திணிக்க முயல்கின்றனர் என்பது நமக்கு விளங்கவில்லை. இத்தனை ஆண்டுகள் அதற்கு இந்து சங்கமும் துணை போயிருக்கின்றது என்பது தான் வருத்தம் அளிக்கிறது.

அது எப்படி இந்து சங்கத்  தலைவருக்கு திராவிடர் பெரியார் வேண்டியவராக இருந்தார் இப்போது ஏன் அதிலிருந்து கழட்டிக் கொள்ளுகிறார்? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.

இப்படி ஓர் அறிக்கையை இந்து சங்கம் வெளியிடுவதை நிறுத்திவிட்டு அதனைப் புகாராகவே கல்வி அமைச்சின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கலாம்.  அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் அதனை வேறு வகையாகவும் கையாள முடியும்.

பொறுப்பான ஓர் இயக்கம் இப்படி தாமதம் செய்யக் காரணம் என்ன? அதைத்தான் கேட்க விரும்புகிறோம்!

No comments:

Post a Comment