Friday 5 February 2021

சொத்து சேர்ப்பவர்கள் கால நேரம் பார்ப்பதில்லை!

 சொத்து சேர்ப்பவர்கள், சொத்து வாங்குபவர்கள்,  முதலீடு, பணம் - இந்த நோக்கம் உள்ளவர்கள் வாய்ப்புக்களை வைத்த கண் வாங்காமல் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள்! அவர்கள் என்ன நிலையில் இப்போது இருக்கிறார்கள் என்பதைக் கூட மறந்து விடுவார்கள்!

கைகளில் பெரும் தொகை இல்லாமல் இருக்கலாம். பண நெருக்கடியில் கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் எந்த காலத்திலும் தங்களது முதலீடுகளை நிறுத்தி விடுவதில்லை! அது சிறிய தொகையாக இருந்தாலும் பாதகமில்லை. ஆனால் முதலீடு செய்வதில் மட்டும் தளர்வதில்லை! தங்களுக்குத் தெரிந்த, தங்களுக்கு முடிந்த ஏதோ ஒன்றில் தங்களது பணத்தை முதலீடு செய்வார்கள்.

    
ஒரு வேளைை அதன் மூலம் உடனடி பலன்்இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் பணம்
 பாதுகாப்பாக இருக்கிறது ஒன்றே போதும்.

இப்போது அரசாங்கம் ஊழியர் சேமநிதியிலிருந்து - கோவிட்-19 காரணமாக - மக்களின் நிதி சுமையைக் குறைக்க நிதியிலிருந்து பணம் எடுக்க வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.

அது பெரும்பாலும் குறைந்த வருமானம் பெறுவோர், நடுத்தர குடும்பங்கள் அத்தோடு அதிகம் வருமானம் பெறுவோர் இப்படி அனைவருமே தங்களது சேமிப்பிலிருந்து பணம் எடுக்கலாம்.  ஏனெனில் சிரமம் என்பது அனைவருக்கும் பொதுவானது தானே!

ஆனாலும் ஒரு சிலர் மாற்றி யோசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இது ஒரு நல்ல வாய்ப்பு. மொத்தமாகக் கிடைக்கும் பணத்தை முதலீடுகளில் போடலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. இப்போது அதுவும் நடந்து கொண்டிருக்கிறது

இவர்கள் பெரும்பாலும் தங்கத்திலும் பங்கு சந்தைகளிலும் முதலீடு செய்கின்றவர்களாக இருக்கிறார்கள். 

ஒரு சிறிய கருத்துக் கணிப்பில் சம்பந்தப்பட்டவர்களால் சொல்லப்பட்டவை  இவைகள் தாம்:

       முதல் நிலையில் அதிக வருமானம் பெறுவோர் (T20) 47.7% விழுக்காடு முதலீடுகளுக்காகவே சேமநிதியிலிருந்து பணத்தைப் பெற்றிருக்கின்றனர்.

        இரண்டாம் நிலையில் நடுத்தர வருமானம் பெறுவோர் (M40) சுமார் 31.1% விழுக்காடு பணத்தைப் பெற்றிருக்கின்றனர்.

        மூன்றாம் நிலையில், மிகக் குறைவான வருமானம் பெறுவோர்(B40) சுமார் 35.3% விழுக்காடு முதலீடுகளுக்காகவே பணத்தைப் பெற்றிருக்கின்றனர்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது நடுத்தர வருமானம் பெறுவோரை விட கீழ் நிலையில் உள்ள குறைவான வருமானம் பெறுவோர் கொஞ்சம் அதிகமாகவே முதலீடுகள் செய்திருக்கின்றனர்! அது இயற்கையாகவே அவர்களுக்கு உள்ள துணிவு தான்! 

ஆனால் சேமநிதியின் பணம் எந்த குறிக்கோளுக்காக கொடுக்கப்பட்டதோ அந்த குறிக்கோளுக்காக பயன்படுத்தியவர்கள் சுமார் 48.6% விழுக்காடு! அதாவது தங்களது அன்றாட தேவைகளுக்காக அதனைப் பயன்படுத்தியவர்கள்.

ஒன்று புரிகிறது. எந்த நிலையிலும் நம்மால் வாழ முடியும் என்னும் நம்பிக்கைத் தெரிகிறது!


No comments:

Post a Comment