Sunday 7 February 2021

அவசரப்படாதீர்கள்!

சில சமயங்களில் ஒரு சில ம.இ.கா.வினர் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு விடுகின்றனர். ஏதோ காணாததை கண்டுவிட்டது போல!

பினாங்கு மாநிலத்தில் நடந்த தைப்புசம் பற்றி  தான் சொல்ல வருகிறேன். எம்.ஓ.சி. அமலில் இருந்த நேரம். மாநிலம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம். அந்த  நேரத்தில் தான் ம.இ.கா.துணைத் தலைவர் டத்தோஸ்ரீ  எம். சரவணன் தைப்பூச ஊர்வலத்திற்கு  மத்தியிலிருந்து அனுமதி வாங்கிக் கொடுத்தார்.  ஆணையைப் போட்டவர்களும் அவர்கள் தான் அனுமதி கொடுத்தவர்களும்  அவர்கள் தான்!

இப்படி நடந்திருக்கக் கூடாது! ஆனால் அங்கும் ஒரு சிறிய அரசியல் விளையாட்டை மத்தியில் நடத்தினார்கள்! மத்திய அரசாங்கத்திற்கு மாநில அரசாங்கத்தை மட்டம் தட்ட வேண்டும். சரவணனுக்கு பேராசிரியர் இராமசாமியை மட்டம் தட்டம் வேண்டும்!  இப்படி ஒரு அல்பத்தனமான ஆசை!

நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  இங்கு மோதிக் கொண்டவர்கள் யார்?  ராமாசாமி-நாட்டுக்கோட்டை செட்டியார்கள்- சரவணன்  ஆக இந்த மூன்று தரப்பும் தமிழர்கள்! தமிழர்கள் மோதிக் கொள்ளுவதைப் பார்த்து ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம்! ஆகா! கண்கொள்ளா காட்சி!

இதைத்தான் ம.இ.கா.வினர் "ஆகா! ஓகோ!" வென்று முகநூல் எதனையும் விட்டு வைக்காமல் இந்த வெற்றி செய்தியைல் பரப்போ பரப்பு என்று பரப்பி வருகின்றனர்!  இந்த சோதனை காலத்தில் இதனை ஒரு சாதனையாக நினைப்பது தான் நமது அசிங்கம் வெளிப்படுகிறது!

இப்படி சாதனையாக நினைப்பவர்கள் கெடா மந்திரி பெசார் தைப்பூச விடுமுறையை இரத்து செய்தாரே அப்போது எங்கே போயினர்?  இதெல்லாம் வெட்கங்கெட்ட அரசியல்! அப்போதும் சரவணன் அங்கே தானே இருந்தார்!

அப்படியே அவர் பெற்றுக் கொடுத்திருந்தாலும் நான் அது ஒரு சாதனை என்று சொல்லமாட்டேன்! ஏன்?  அது வழக்கம் போலத் தானே!

ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இப்போதெல்லாம் ம.இ.கா. பக்கமிருந்து எந்த ஒரு சாதனையும் வரப்போவதில்லை! அவர்கள் அதற்கு மேல், மேலே, உயரே, உயரே போய்விட்டனர்! இந்திய சமுதாயத்திற்கு உதவும் அளவுக்கு அவர்களிடம் சரக்கு எதுவுமில்லை!

இந்தியர்களின் ஆர்வம் எப்படி ம.இ.கா. வின் மேல் தளர்ந்து போனதோ அதே போல அவர்களுக்கும் இந்தியர்களின் மேல் உள்ள ஆர்வம் தளர்ந்து போனது என்பதை மறக்க வேண்டாம்!

அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு தான் அரசியலில் அவர்கள் நீடிப்பார்களா என்பது நமக்குப் புரிய வரும்.

சும்மா தேவை இல்லாமல் அவசரப்பட்டு அவர்களைப் பாராட்ட வேண்டாம். நல்லது செய்தால் பாராட்டுவோம்! இப்போது உள்ள நிலையில் அவர்களிடமிருந்து எந்த ஒரு உதவியும் - குறிப்பாக பொருளாதார உதவி - எதிர்பார்க்க முடியாது. 

ம.இ.கா. வினரால் ஏதோ ஒன்று கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பாராட்டத்தான் செய்வார்கள்! அதை நீங்கள் நேரடியாகவே செய்யலாம்!

No comments:

Post a Comment