Saturday 13 February 2021

பிரதமர் தொடக்கி வைக்கிறார்!

             

                                                           Pfizar (Corona Vaccine)                                                 

இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் கோவிட்-19 தடுப்பூசி பொது மக்களின் பயன்பாட்டுக்காக   தொடங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி போடும் முதல் நபராக நமது பிரதமர் முகமது யாசின்  இருப்பார் என அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்தார்.

அவர் தான் தடுப்பூசி போடும் முதல் நபர் என்பதின் நோக்கம் "யாரும் பயப்பட வேண்டியதில்லை! இந்த தடுப்பூசி முறை மிகவும் பாதுகாப்பானது! ஆபத்து இல்லாதது!"  என்பது தான். 

பிரதமரைத் தொடர்ந்து சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படுவர்.

இந்த தடுப்பூசி திட்டத்தில் தேசிய மருந்தியல் கட்டுப்பாடு நிறுவனம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பைஸர் தடுப்பூசியைப் பயன்படுத்த ஒத்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

இன்றைய நிலையில் 49 நாடுகள் இந்த தடுப்பூசி முறையைத்தான் பின்பற்றி வருகின்றன. உலக சுகாதார நிறுவனமும் இந்த தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக, பயப்பட ஒன்றுமில்லை என்பதைத் தான் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு, பயப்பட ஒன்றுமில்லை என்று நம்மைப் பார்த்து பிரதமர் உறுதி அளித்தாலும் ஒன்றை நாம் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.  மலேசியர்களுக்கு அரசாங்கம் தடுப்பூசி போடுகின்றது. அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் வெளியே இலட்சக்கணக்கான பேர் எந்த ஆதராமுமின்றி, எந்த ஆவணமுமின்றி நாட்டில் தங்கியிருக்கிறார்களே அவர்கள் நிலை என்ன? 

அவர்களுக்கான தடுப்பூசி போடவில்லையென்றால் கோவிட்-19 எந்த காலத்தில் மலேசியாவிலிருந்து ஒழிக்கப்படும்? அது சாத்தியமே இல்லையென்று தான் பொருள்!

அதனையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறோம்.

வெளி நாட்டு சட்ட விரோத தொழிலாளர்கள் இருக்கும் வரை, அவர்களுக்கான தடுப்பூசி போடாதவரை, கோவிட்-19 இங்கேயே தான் தொடரும் என்று உறுதியாக சராசரியான நாங்கள் நம்புகிறோம்!

பிரதமர் தொடக்கி வைக்கிறார், நன்று! நன்று!  அதே சமயத்தில் சட்டவிரோதமானவர்களை முடக்கி வைத்தால் நாடு முடங்கிப் போகும்!

No comments:

Post a Comment