Friday 12 February 2021

புகார் செய்பவர் யார்?

 டான்ஸ்ரீரீ டோமி தோமஸ் எழுதிய "எனது கதை: அந்தரத்தில் நீதி" என்னும் புத்தகம்  இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அவர் சட்டத்துறைத் தலைவராக சிறிது காலம் இருந்ததால் அந்த சிறிது கால இடைவெளியில் தனது அனுபவங்களை ஒரு தொகுப்பாக தொகுத்திருக்கிறார். 

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்  சுதந்திரத்திற்குப் பின்னர் சட்டத்துறைத் தலைவர்களாக இருந்தவர்கள் அனைவருமே மலாய்க்காரர்கள். இடையில் ஒருவர் மட்டுமே மலேசிய இந்தியரான டோமி தோமஸ்.

டோமி எழுதிய அந்த புத்தகத்தைப் பற்றியான பலவிதமான அபிப்பிராயங்கள்.உலவி வருகின்றன. முழுமையாக அந்த புத்தகத்தை இன்னும் படிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.  எல்லாம் பத்திரிக்கைகளில் வருகின்ற துண்டு துண்டு செய்திகள் தாம்!

இன்றைய நிலையில் அந்த புத்தகத்தைப் பற்றி நூற்று முப்பதற்கும் மேற்பட்ட  புகார்கள் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன!

எனக்கு அதில் ஒரு சின்ன ஆசை!  தங்களைப் பற்றி தவறான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன என்று நினைப்பவர்கள் காவல்துறையில் புகார் செய்வதில் நியாயமுண்டு. ஆனால் நூற்று முப்பது பேர் என்றால் ...?  சரியாகப் புரியவில்லை! அத்தனை பேரா சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கேட்க வேண்டியுள்ளது!

சரி அதை விடுவோம். புகார் செய்தவர்கள் யார் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள்? 

பொதுவாக செய்திகளைப் படிக்கும் போது இந்தியர், சீனர் புகார் அளித்திருப்பார்கள் என நம்ப இடமில்லை. அப்படியானால் ஏன் மலாய்க்காரர் மட்டும் என்னும் கேள்வி எழுகிறது.

இங்கு மலாய்க்காரர் என்னும் போது அது அம்னோ கட்சியினர் பற்றியே பேசுகிறோம். மலாய்க்காரர் யாருக்கும் இதில் அக்கறை இல்லை. அம்னோ அரசியல்வாதிகள்  தான் தங்களுக்கு அதிக அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்பவர்கள்! காரணம் அவர்கள் தானே ஆண்டு அனுபவித்தவர்கள்! அதனால் தான் அவர்கள் எதற்கெடுத்தாலும் அரண்டு போகிறார்கள்!

இருந்தாலும் உண்மை நிலவரம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. அப்படியே  படித்தாலும் என்ன செய்து விட முடியும்? புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறதோ அது அவருடைய கருத்து. எழுதப்பட்டது,  எழுதப்பட்டது தான்! இனி மேல அவராலும் மாற்ற முடியாது நம்மாலும் மாற்ற முடியாது!

பொறுத்திருப்போம்!

No comments:

Post a Comment