Friday 19 February 2021

ஏன் இந்த புலம்பல்!

 மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டவர் போல் பேசுகிறார்!

திராவிடக் கட்சிகளின் கொள்கை நாத்திகம் என்றால் - அந்த கொள்கை  தமிழ்ப்பள்ளிகளில் போதிக்கப்படுகிறது என்றால் - அதனை இத்தனை ஆண்டுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தீர்களே, நீங்களும்  குற்றவாளி தானே!

ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் உங்களால் எடுக்க முடியவில்லை என்று நாங்கள் கேட்கலாம் தானே. அப்படியென்றால் யாரையோ காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள் என்பது தானே பொருள்!  

காட்டிக்கொடுப்பது என்ன பெரிய பிரச்சனையா? கல்வி அமைச்சுக்கு ஒரு கடிதம் தானே. இதைக் கூட உங்களால் செய்ய முடியவில்லையென்றால்  அப்புறம் என்ன மற்றவர்களுக்குப் புத்தி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்! உங்களுடைய புத்திமதி யாருக்குத் தேவை!

இந்த நேரத்தில் என்னிடம் ஒரு கேள்வி உண்டு. நாம் தமிழர் கட்சி எங்கே எப்படி தீடீரென்று முளைத்து வந்தது? அவர்கள் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்கள் அல்லவே!

    

                                                சீமான் - கயல்விழி தம்பதியர்

சமீபத்தில் சீமானின் மகன் பிரபாகரனுக்கு சிவகங்கை மாவட்டம், முடிக்கரை கிராமத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் காதணி விழா நடந்தது. அவரே: "மகனின் காதணி விழாவிற்காகவும், குலதெய்வ வழிபாட்டிற்காகவும் வந்தோம். 108 கிடாய் வெட்டி விருந்து வைத்து மகிழ்ந்தோம்" என்று கூறியிருக்கிறாரே!  இங்கு எங்கே கடவுள் மறுப்புக் கொள்கையைக் கண்டீர்கள்?

நாம் தமிழர் கட்சி என்பது தமிழர்கள் தங்களைப் பிறர் ஆள விடக்கூடாது என்கிற கொள்கை உடைய உள்ள ஒரு கட்சி.   ஆயிரக்கணக்கான தமிழ் இந்துக்களுக்கு   ஒரு தமிழரல்லாதவரான  நீங்கள் தலைமை தாங்குவது தமிழருக்கு என்ன பெருமை? அதுவும்  தமிழைப் புறக்கணித்து வேறு ஒரு மொழியில் உங்கள் சட்டையில் போட்டுக் கொண்டிருக்கிறீர்களே அது தமிழர்களை அவமானப்படுத்துவதைத் தவிர வேறு என்ன? அதைத்தான் நாம் தமிழர் கட்சி எதிர்க்கிறது. திராவிடக் கட்சிகள் கடவுள் மறுப்புக் கொள்கையுடைவை என்றால் அதை நீங்கள் தான் நிருபிக்க வேண்டும். ஆனால் நாம் தமிழர் கட்சியை வம்புக்கு இழுக்காதீர்கள்! நாம் தமிழர் கட்சி என்பது தமிழர்களுக்கான ஒரு கட்சி. அது பற்றி தெலுங்கரோ,  மலையாளியோ பேசுவதற்கு ஏதுமில்லை! நாங்கள் மற்ற இனத்தவர் பற்றி  பேசுவதில்லையே!

எல்லாவற்றுக்கும் ஒரு முடிச்சு போட்டு புலம்பாதீர்கள். உங்கள் கொள்கைக்கு எதிரானவர் யார் என்பதை மட்டும் கவனியுங்கள். தேவை என்றால் நடவடிக்கை எடுங்கள். இதுவரை எதுவும் செய்யாத நீங்கள் இனி மேல் என்னத்தை செய்துவிடப் போகிறீர்கள்!

No comments:

Post a Comment