Thursday 11 February 2021

ஸ்ரீஅபிராமி தனது இலட்சியத்தை அடைவார்!

 


                                                                                                                                                பனிச்சறுக்கு வீராங்கனை சிறுமி ஸ்ரீஅபிராமி  தனது இலட்சியத்தை அடைவார் என உறுதியாக நம்புகிறோம்.

பல பொருளாதாரச் சிக்கல்களை எதிர்நோக்கியிருந்த அவரது பெற்றோர்கள் இப்போது கொஞ்சம் தற்காலிகமாவது நிம்மதி அடையளாம்.

ஸ்ரீஅபிராமி அறவாரியத்தின் சார்பில் திரட்டப்பட்ட நிதி இதுவரைக்  கிட்டத்தட்ட ஐந்தரை இலட்சம் வெள்ளி என்று அறவாரியத்திற்குப்  பொறுப்பேற்றிருக்கும் ஓம்ஸ்.பா.தியாகராஜன் கூறியுள்லார்.

ஓம்ஸ். பா. தியாகராஜன் ஏற்கனவே தனது சொந்த செலவில் ஸ்ரீஅபிராமியின் பயிற்சிகளுக்கு பெரும் அளவில் உதவியுள்ளார். சமீபகாலம் வரை அபிராமியின் தந்தையார் தனது சொந்த வீட்டை விற்று மேலும் பயிற்சிக்காக செலவுகள் செய்துள்ளார்.

ஒன்றை நினைத்து நாம் வியக்கிறோம். நமது குடும்பங்களில் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைக்க - அதாவது மருத்துவம் பயில - வீட்டை விற்றார்கள், நிலத்தை விற்றார்கள் என்று தான் நாம்  கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஆனால் தனது குழந்தை பனிச்சறுக்கு விளையாட்டில் உலகளவில் வெற்றி வீராங்கனையாக வலம் வர வேண்டும் என்று தனது மகளுக்காக இத்துணை  இடர்களையும், துன்பங்களையும் தாங்கிக் கொண்டு தொடர்ந்து போராடி வருகிறாரே! அவர் தனது மகளின் மேல் வைத்திருக்கும் அன்பையும், பாசத்தையும் என்னவென்று சொல்லுவது? மகளின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் ஒரு தந்தையின் போராட்டம் அது! அதற்கு ஈடு இணையில்லை!

ஸ்ரீஅபிராமியின் கனவு மெய்ப்பட அவரின் அறவாரியத்திற்கு எழாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் நிதி வழங்கியுள்ளனர். இது முடிவல்ல. இன்னும் தொடரும். ஒரு பத்து இலட்சமாவது கையில் இருந்தால் இன்னும் தெம்பாக இருக்கும். 

அரசாங்க உதவி, ஆளுங்கட்சியின் உதவி என்பது உதட்டளவில் அதிகம்.  அதனால் பொது மக்களின் உதவியே முக்கிய தேவை. இந்தியர் ஒன்று சேர்ந்தால் எதனையும் சாதிக்க முடியும். இப்போது நாம் அதனை நிருபித்து வருகிறோம். இந்த "ஒன்று" என்பதை நாம் தொடர்ந்து நிருபிக்க வேண்டும்.

வருகின்ற குளிர்கால ஒலிம்பிக்கில் அவர் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும். அதுவே நமது பிரார்த்தனை.

No comments:

Post a Comment