பெர்சாத்துவின் இளைஞர் பிரிவுத் தலைவரும், விளையாட்டுத் துறை துணை அமைச்சருமான வான் அமாட் பைஸால் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்!
இளைஞர்கள் என்றால் ஒழிக கோஷம் போட வேண்டும்! ஆக்ககரமான கருத்தைச் சொல்லக் கூடாது என்பதை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார்!
ஓரு மூத்த அரசியல்வாதியான ஒற்றுமைத்துறை அமைச்சர் ஹலிமா சொன்ன ஒரு கருத்துக்கு அவர் எதிர்கருத்தைச் சொல்லியிருக்கிறார்!
அமைச்சர் தாய் மொழிப்பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று கூறியதற்கு தனது எதிர்ப்பைக் காட்டும் வகையில் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்!
நாட்டின் ஒற்றுமைக்குத் தாய் மொழிப்பள்ளிகள் பங்காற்றவில்லை என்கிற அவரின் குற்றச்சாட்டின் மூலம் என்ன சொல்ல வருகிறார்? இன்றைக்கு மலாய் கட்சிகள் பல, பலப்பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன. மலாய்க்காரர்களும் பிரிந்து கிடக்கின்றனர். இதற்குத் தாய் மொழிப்பள்ளிகள் தான் காரணம் என்று சொல்ல வருகிறரா!
தாய் மொழிப்பள்ளிகள் தலைசிறந்த குடி மக்களை உருவாக்கவில்லை என்று எதனை அடிப்படையாக வைத்துக் கூறுகிறார்? இதனைத்தான் சிறுபிள்ளைத் தனம் என்பது! தனக்கு வயது போதாது என்பதை நிருபித்திருக்கிறார்!
தோட்டப்பாட்டாளிகளின் பிள்ளைகள் அதே தாய் மொழிப்பள்ளிகளில் படித்து, தங்களது ஏழைப் பெற்றோர்களின் பணத்தில் படித்து டாக்டர்களாகவும், வழக்குரைஞர்களாகவும் அந்தக் காலத்திலேயே நாட்டில் பணிபுரிந்திருக்கிறார்கள் அவர்களுக்கு அரசாங்கம் எந்தப் பண உதவியும் செய்யவில்லை. எல்லாம் சொந்தப் பணம். எந்த சலுகையும் கொடுக்கப்படவில்லை! அதுவே தாய் மொழிப்பள்ளிகளின் வெற்றி. வேறு என்ன சான்றுகளைக் எதிர்ப்பார்க்கிறீர்கள்!
ஒரு இன அரசியல் கடைப்பிடிக்கப்படும் நாட்டில் திறமையற்றோர் தான் பதவிக்கு வர முடியுமே தவிர திறமையாளர்கள் ஒதுக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!
ஓர் அமைச்சர் அவருடைய தகுதிக்கு ஏற்ப பேச வேண்டுமே தவிர இப்படி தான்தோன்றித்தனமாக பேசுக்கூடாது! நாட்டின் சரித்திரைத்தைத் தெரிந்து கொண்டு பேச வேண்டும். தெரியாவிட்டால் அது பற்றிப் பேசக்கூடாது!
நல்ல வேளை நமது தாய் மொழிப்பள்ளிகள் முட்டாள்களை உருவாக்கவில்லை என்பதில் நமக்கு மகிழ்ச்சியே
No comments:
Post a Comment