பிரதமர் மோகிதீன் யாசின் மீண்டும் ஓர் இடறலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது!
ஆமாம், இப்போது துங்கு ரசாலியும் அம்னோவை "நடப்பு அமைச்சரைவையிலிருந்து விலகுங்கள்!" என்று கூற ஆரம்பித்து விட்டார்!
துங்கு ரசாலியின் குரலுக்கு ஒரு மரியாதை உண்டு, மதிப்பும் உண்டு.
அம்னோவின் உள்ள மற்றவர்களின் குரலுக்கு வேறு மாதிரியான "மரியாதை" உண்டு. துங்கு ரசாலியை ஓர் ஊழல்வாதி என்று யாரும் கையை நீட்ட முடியாது! அந்த அளவுக்கு நல்ல பெயர் வாங்கியவர்.
துங்கு ரசாலியின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? எல்லாருக்குமே தெரிந்தது தான். பிரதமர் மொகீதீன் தனது பெர்சாத்து கட்சியை பல்லின கட்சியாக அறிவித்ததின் காரணமாக இப்போது பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கிறார்! முதலில் ஓர் இனக் கட்சியாகத் தொடரும் என்று நினைத்தவர்களுக்கு இப்போது பல இனக் கட்சி என்கிற போது அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது தான் பிரச்சனை! அதுவே துங்கு ரசாலியின் மாற்றத்திற்கும் காரணம்.
பிரதமர் மொகிதீன் சரியான சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்பது நமக்குப் புரிகிறது!
அவருக்குள்ள பிரச்சனை: மலாய் மக்களுக்கான கட்சி என்றாலும் பிரச்சனை உண்டு. பல இன கட்சி என்றாலும் பிரச்சனை உண்டு. அப்படி ஒரு சிக்கல்.
இரண்டே இரண்டு "பெரும்பான்மையை" வைத்துக் கொண்டு ஆட்சியை நடத்த வேண்டுமென்றால் துக்ளக் ஆட்சி தான் நடக்கும். அது தான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது!
நம்மவர்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு. மொகிதீன் நாட்டின் எட்டாவது பிரதமர். எட்டாம் எண் என்பது ஒன்று தூக்கிவிடும்! அல்லது தூக்குத்தூக்கி லிடும்! இப்போது அவரைத் தூக்கித் தூக்கி விட்டுக் கொண்டிருக்கிறது! அதனுடைய ராசி என்பது தூக்கும் அல்லது தாக்கும்! நல்லவர்களுக்கு நல்லது செய்யும் கெட்டவர்களுக்கு அதிகத் தீங்கிழைக்கும். அதுதான் இதனது எட்டாவது எண்ணின் ராசி! அவர் நல்லவரா கெட்டவரா என்பதை நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்! துன் சாமிவேலு எட்டாம் எண்ணில் பிறந்தவர். அரசியலில் அவரது உச்சத்தை யாரும் அடைந்ததில்லை ஆனால் இப்போது அவரது உச்சம் என்ன என்பதை அவனது மகனே உலகிற்கு அறிவித்து விட்டார்!
இப்போது துங்கு ரசாலின் இந்த அறிவிப்பு என்ன மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறது என்பதை இன்னும் கொஞ்சம் நாளில் தெரியவரும்!
No comments:
Post a Comment