இவ்வாண்டு முதல் நோபெல் பரிசு தொகை அதிகரிக்கப்படுகிறது!
அதிர்ஷ்டசாலி யார் என்றெல்லாம் கேட்கக் கூடாது. எல்லாம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு தான்!
பரிசு வாங்குபவர்கள் யாரும் வெறும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்த முடியாது. அதற்கெல்லாம் அது இடமில்லை. அதனை நம் நாடுகளிலே பார்க்கலாமே தவிர நோபெல் அறக்கட்டளை அதற்கான இடமில்லை!
இப்போது நோபெல் பரிசின் தொகை $110,000 டாலராக உயர்த்தப்பட்டிருக்கிறது. சுவீடன் நாட்டு விஞ்ஞானி ஆல்ஃரெட் நொபெல் என்பவரால் 1901 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அறக்கட்டளை இன்றளவும் தனது பணிகளைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறது.
நொபெல் பரிசு என்பது பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கான ஓர் அங்கீகாரம் எனச் சொல்லலாம். உலக சமாதானம், இலக்கியம், விஞ்ஞானம், பொருளாதாரம், மருத்துவம் என்று பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்தவர்கள் இந்தப் பரிசுகளுக்கு உரியவர்களாக நிபுணத்துவ குழுக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
1901 - ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நொபெல் பரிசு இன்றளவும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இடையே தவிர்க்க முடியாத சில காரணங்களால் தடைப்பட்டாலும் அதனுடைய உன்னதமான நோக்கம் தடைப்படவில்லை.
இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். அதிகமான நோபல் பரிசுகளை வென்றவர் யாராக இருக்க முடியும்? நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அவர்கள் யூதர்கள் என்பது தான் ஆச்சரியம்! அதாவது இஸ்ரேல் நாட்டில் உள்ளவர்கள் மட்டும் அல்ல இஸ்ரேல் அல்லாத மற்ற நாடுகளில் உள்ள யூதர்களையும் சேர்த்துத் தான்.
இதுவரை யூதர்கள் மட்டும் 182 பேர் நோபெல் பரிசுகளை வென்றிருக்கின்றனர்! அதாவது உலக மக்கள் தொகையில் 0.2% விழுக்காடு தான் யூதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தான் உலக பொருளாதாரத்தில் 70% விழுக்காட்டை கையில் வைத்திருக்கின்றனர்! அது மட்டும் அல்ல நான், நீங்கள், நாம் அனைவரும் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களில் ஏதோ ஒரு வகையில் அவர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்கள் இருக்கின்றன! ஒதுக்க முடியுமா?
நம்மைப் பொறுத்தவரை வருங்காலங்களில் நமது தமிழ்ப்பள்ளிகளைத் தான் நாம் நம்பியிருக்கிறோம். இந்த மாணவர்கள் தான் உலக அளவில் தங்கங்களை வாரிக்குவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மூலம் தான் தனிப்பட்ட சாதனைகளை - நோபெல் பரிசுகளை எதிர்பார்க்கிறோம்.
நல்லது நடக்கட்டும். பரிசு தொகைகள் இன்னும் கூடும். பேரும் புகழும் கிடைக்கும். வாழ்த்துகிறோம்!
No comments:
Post a Comment