இது தான் நாம் அமைச்சர்களூக்கு சொல்லுகின்ற ஆலோசனை: பேசுவதற்கு முன் யோசியுங்கள்! பேசிய பிறகு சாக்குப் போக்குச் சொல்லாதீர்கள்!
சமீபத்தில் சபா பல்கலைக்கழக மாணவியைப் பற்றி இரு துணை அமைச்சர்கள் கூறிய கருத்துக்கள் மக்களிடையே கொந்தலிப்பை ஏற்படுத்திய்து.
அவர்கள் அந்த மாணவியைப் பற்றியான செய்தியைக் கிண்டலடித்தனர்! கேலி செய்தனர்! அந்த மாணவியின் செய்தில் உண்மைத் தன்மை இருக்கிறதா என்பது பற்றி கவலைப்படவில்லை!
ஆனால் பின்னர் தங்களது தவற்றினை உணர்ந்து எங்கோ போய் மறைந்து கொண்டனர் என்கிற செய்தியையும் நாம் அறிவோம்.
ஒரு நல்ல செய்தி. இந்த இரு அமைச்சர்கள் ஒளிந்து கொண்டாலும் அரசாங்கம் அவர்கள் செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் சம்பந்தப்பட்ட மாணவி வெவோனா மொசிபின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் அரசாங்க சார்பில் மன்னிப்பைக் கேட்டுக்கொண்டார்.
இது தேர்தல் நேரம் அல்லவா! அதனால் தானோ? பரவாயில்லை! அதை விட்டு விடுவோம்!
நாம் சொல்ல வருவதெல்லாம், அமைச்சார்களே! உங்களிடம் போதுமான தகவல்கள் இல்லையென்றால் சரியான தகவல்களைப் பெற்று அதன் பின்னர் உங்கள் கருத்தை வெளிப்படுத்தங்கள். நீங்கள் அமைச்சர்கள் என்பதனால் நீங்கள் சொல்லுவதையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் அவசியமில்லை! மக்களுக்கும் உண்மை எது பொய் எது, என்பதை அறிந்திருக்கின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள்!
நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. காரணம் பாஸ் கட்சியினருக்கு வாய் கொஞ்சம் அதிகம் என்பது மக்களுக்குப் புரிகிறது! அதனால் நீங்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் பாஸ் கட்சியினருக்கு அமைச்சரவை என்பது புதிது! புதுசு என்பதால் கொஞ்சம் லூஸ் தனமும் அதிகம்!
இப்போது நாம் கேட்டுக் கொள்ளுவதெல்லாம் சபா மாநிலத்தில் இணையத்தள வசதிகளை மேம்படுத்துங்கள் என்பது தான். மீண்டும் மாணவர்களை மரத்தில் ஏறி தங்களது பாடங்களைச் செய்ய வைக்காதீர்கள் என்பது தான்!
யார் அரசாங்கம் அமைப்பது என்பதில் மட்டும் அக்கறை காட்டாதீர்கள். மக்களின் நலனிலும் அக்கறை செலுத்துங்கள்!
No comments:
Post a Comment