ம.இ.கா.வின் முன்னாள் தலைவர்கள் எல்லாம், எல்லாவற்றையும் மறந்து, புயலாகப் புறப்படுகிறார்களாம் இந்த சமுதாயத்தை மாற்றியமைக்க!
நீங்களே மாற்றிக் கொள்வீர்கள் என்பதிலே எங்களுக்குச் சந்தேகமில்லை! ஆனால் இந்த சமுதாயத்தை மாற்றியமைப்பீர்களா என்கிற சந்தேகம் அன்றும் உண்டு! இன்றும் உண்டு!
புயலோடு புயலாக நீங்கள் மாற்றியமைப்பதற்கு ஒரு சில விஷயங்கள் இப்போது கையிலே உண்டு. அதை மாற்றியமைத்து வீட்டிர்களானால் அப்புறம் உங்களை எப்படி வேண்டுமானாலும் பாராட்டோ பாராட்டு என்று பாராட்டுகிறேன்! அது வரை நீங்கள் இந்த இந்திய சமுதாயத்தின் துரோகிகள் என்கிற அடையாளத்தை விட்டு விட முடியாது!
நீங்கள் முன்னாள்கள் என்று சொல்லுகிறீர்களே உண்மையில் யார் நீங்கள்? சாமிவேலுவின் சில்லறைகள் என்பது தானே நீங்கள்? அவரோடு சேர்ந்து நீங்கள் ஏற்படுத்திய கறையை உங்களால் போக்கிவிட முடியுமா? அது என்ன அவ்வளவு எளிதா? அது உங்களால் முடியுமா? அவரோடு சேர்ந்து நீங்களும் ஆட்டம் ஆடி பாட்டுப் பாடியவர்கள் தானே!
இப்போது புயலாக வருகீறீர்கள் என்றால் ஏதோ செனட்டராக ஆகிவிட முடியாதா என்கிற ஏக்கத்தோடு வருகிறீர்களே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. இன்னொன்று அரசாங்க அமைப்புக்களில் ஏதாவது பதவிகள் கிடைக்காதா என்பது தான்!
உங்கள் முன்னே ஒரு சவாலை வைக்கிறேன். பேராக் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட 2000 ஏக்கர் நிலத்தை முழுவதுமாக உங்கள் வீட்டுச் சொத்தாக்கினீர்களே அதை சமுதாயத்திற்குத் திருப்பித் தர முடியுமா? மலாக்காவில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு சீனப் பெண்மணியை அதிகாரியாகப் போட்டிருக்கிறார்களே அதனை உங்களால் மாற்ற முடியுமா? பக்கத்தான் அரசாங்கத்தில் இது நடக்காது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் உங்கள் அரசாங்கத்தில் இது நடக்கும்!
எப்படியிருப்பினும் வாருங்கள்! புயலாக வராதீர்கள்! புயல் உங்களை அடித்துக் கொண்டு போய்விடும்! அப்புறம் உங்களால் தலை தூக்கவே முடியாது!
கொஞ்சம் நல்ல எண்ணத்தோடு வாருங்கள், ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து வாருங்கள். நல்ல எண்ணம் என்பது கொஞ்சம் கஷ்டமானதது தான்! உங்கள் கட்சி அப்படி உங்களை வளர்க்கவில்லை!
இனி மேலாவது அந்த பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment