ஒரு சினிமா நகைச்சுவை காட்சியில் வந்த வசனம் இது: சிவப்பாய் இருப்பவன் பொய் சொல்லமாட்டான்! என்பது தான் அது!
பொய்யுக்கும் நிறத்திற்கும் என்ன சம்பந்தம்? சிவப்பாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்றால் கறுப்பாய் இருப்பவன் பொய் சொல்லுவான் என்பது தானே பொருள்?
உண்மை தான்! நிறத்திற்கும் பொய்யுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உண்மை தான்!
ஆனால் என்னுடைய பத்து பதினோறாம் வயதில் நானும் கூட இப்படி ஒரு கருத்தைக் கொண்டிருந்தேன்! அது எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது, எதனால் வந்தது அதன் மூலம் என்ன என்பதையெல்லாம் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை!
இங்கு நான் ஒன்றை சொல்லிவிட விரும்புகிறேன். நான் 'சிவப்பாய்' என்பது வைள்ளைக்கார துரைகளை மட்டும் தான்! அவர்களைத் தான் நான் சிவப்பாய் பார்த்திருக்கிறேன் அந்த வயதில்!
பொய் சொல்ல மாட்டார்கள் என்பது மட்டும் அல்ல! அவர்கள் நல்லவர்கள்! வல்லவர்கள்! கடவுளுக்கு அடுத்தபடியானவர்கள்! இப்படியெல்லாம் அவர்களைப் பற்றியான ஒரு கருத்து எனக்கு இருந்தது! என்னவோ அறியாத வயது! அதனால் கற்பனைகள் ஏராளம்!
ஆனால் பிற்காலத்தில் நான் தோட்ட அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த போது தான் "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!" என்று அவர்களது பற்றியான எனது அபிப்பிராயம் மாறிவிட்டது!
அவர்களுக்குள்ளேயே சண்டை உண்டு, சச்சரவு உண்டு, வேறொரு ஊர்காரனை அவர்களுக்கும் பிடிக்காது, எல்லா ஆபாசங்களும் அவர்களிடமிருந்து தான் இறக்குமாதியாகின்றன போன்றவைகள் எல்லாம் பின்னர் நான் தெரிந்து கொண்டேன்!
ஸ்கோட்லாந்து காரனுக்கு வேறு ஊர்களில் பிறந்தவனைப் பிடிக்காது! பர்மாவில் பிறந்து வெள்ளைக்காரனுக்கு இத்தாலியில் பிறந்தவனைப் பிடிக்காது! இத்தாலியில் பிறந்தவனுக்கு பிரிட்டனில் பிறந்தவனைப் பிடிக்காது! எல்லாமே நம்மைப் போல சராசரிகள் தான்! பிடிக்காது என்றாலே அப்புறம் பொய்யும் புரட்டும் இல்லாமலா போகும்?
நம்மை விட அவர்கள் கேடுகெட்ட ஜென்மங்கள் என்று தாராளமாகச் சொல்லலாம்!
அதனால் பொய்யுக்கும் சிவப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இப்போது அது நமக்கு நன்றாகத் தெரிகிறது. நம்மைச் சுற்றிப் பார்த்தாலே போதும். பொய்யும் புரட்டும் நம்மைச் சுற்றியே இருக்கின்றன! வெள்ளைக்காரன் இப்போது இல்லை!
ஆக சிவப்போ, கறுப்போ பொய் சொல்லுவதை நிறுத்த வழி இல்லை! அவனவன் திருந்தாத வரை பொய் என்றும் நிலைத்திருக்கும்!
No comments:
Post a Comment