Friday 3 July 2020

கொள்ளையடிப்பவன் கோடிசுவரனா? (76)


நம்மிடையே தொழிலதிபர் என்பவர் யார் என்பதில் பல குழப்பங்கள் உள்ளன!

தமிழ் நட்டில் கோயில் சிலைகளைத் திருடி விற்பவனை தொழிலதிபர் என்கிறார்கள்! அரசியலில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவனைக் கோடிசுவரன் என்கிறார்கள்! தொழிலில் நேர்மையற்ற - எந்த ஒரு நீதியையும் நேர்மையையும் கடைப்பிடியாதவனை, பணம் சேர்த்தவனை - தொழிலதிபர் என்கிறார்கள்! 

யார் தொழிலதிபர் என்பதில் நமக்கு நிறையவே கேள்விகள் எழுகின்றன.

பணம் வேண்டும் என்றால் அதற்காக உழைக்க வேண்டும். தொழிலில் கவனம் செலுத்த வேண்டும். ஓரிரு ஆண்டுகளில் தொழிலதிபர் ஆக சாத்தியமில்லை!  எல்லாம் ஒவ்வொரு படியாக மேலே போக வேண்டும். அதுவும் கூட ஓரிரு தலைமுறை ஆகலாம்.

எடுத்த எடுப்பில் நான் தொழிலதிபர் என்றால் எங்கோ, ஏதோ கோளாறு ஏற்பட்டதாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்! அப்படியெல்லாம் யாராலும் வந்து விட முடியாது! இது மந்திரத்தால் மாங்காய் காய்க்கும் வேலை அல்ல! 

தொழிலில் முதல் தலைமுறையிலேயே தொழிலதிபர் ஆகி விட முடியாது.  அப்படி ஒருவர் ஆக முடிந்தால் அது ஏமாற்று வேலை என்பதைப்  புரிந்து கொள்ளலாம்.

ஒரு கோடிசுவரன் என்றால் அவருக்குக் குறைந்தபட்சம் ஒரு கோடி சொத்துக்கள் இருக்க வேண்டும். தொழிலதிபர் என்றால் ...? அதற்கு மேலே...!   சும்மா தொழில் செய்பவர்கள்  எல்லாம் தொழில் அதிபர்கள் என்கிற வரம்புக்குள் வர முடியாது.

நம் நாட்டில் யார் தொழிலதிபர்கள்?  முதல் பத்து பணக்காரர்கள் அல்லது இருபது பணக்காரர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் அவர்கள் பல கோடிகளுக்கு அதிபர்கள் ஆவார்கள். 

நமது தமிழர்களில் ஒருவரைத் தொழிலதிபர் என்று சொல்ல வேண்டும் என்றால் நம் கண்முன் நிற்பவர் ஆனந்தகிருஷ்ணன் மட்டுமே. வேண்டுமானால்  ஏர் ஏசியா,  டோனி ஃபெர்னாண்டெஸ்  சொல்லலாம்.  ஆனால் ஆனந்தகிருஷ்ணன் எட்டாத உயரத்தில் இருக்கிறார்!

அதனால் தொழிலதிபர் என்பது சாதாரண விஷயம் அல்ல. அதனுடைய உயரம் வேறு. நேற்று முளைத்த காளான்களையெல்லாம் தொழிலதிபர் என்று அடைமொழியிட்டுக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல!

அரசியலில் கொள்ளையடித்தவன், மக்கள் பணத்தைச் சூறையாடியவன், திருட்டுத் தொழிலில் ஈடுபட்டவன் - இவர்கள் எல்லாம் திருடர்கள் என்று சொல்லலாமே தவிர அவர்களைத் தொழிலதிபர்கள் என்று சொல்லக்கூடாது! அந்த வரம்புக்கள் அவர்கள் வரமாட்டார்கள்!

No comments:

Post a Comment