சிலாங்கூர் கோலாலம்பூர் இந்திய வர்த்த சங்கத்தினர் நல்லதொரு முடிவை எடுத்திருக்கின்றனர்.
ஆமாம், வீட்டுக்கு ஒரு வர்த்தகரை உருவாக்க வேண்டும் என்கிற குறிக்கோளோடு களம் இறங்கியிருக்கின்றனர்.
நல்ல குறிக்கோள் என்பதில் ஐயமில்லை, நம்முடைய இளைஞர்கள் இன்னும் நிறைய தொழிலில் இறங்க வேண்டும்.
முதலில் நமக்குக் கல்வி வேண்டும். கல்வி என்பதே பெரிய மூலதனம். தொழிலில் இறங்கி ஏற்படுகின்ற ஏற்ற இறக்கங்களைக் கலவியின் மூலம் தவிர்த்து விடலாம். அது தான் கல்வியின் மகத்துவம்.
ஆனாலும் படிக்கும் போது எளிமையாக இருந்தாலும் அனுபவமே சிறந்த ஆசான். அனுபவத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை!
ஒவ்வொரு இளைஞருக்கும் கல்வி அவசியமாகிறது.
கல்வி இல்லாதவருக்குத் தொழில் கைகொடுக்கும். சீனக் குடும்பங்களைக் கவனித்தால் ஒன்று நமக்குப் புலப்படும். கல்வியில் சிறந்து விளங்குபவர்களை சீனக் குடும்பங்கள் எப்பாடுப் பட்டாவது அவர்களைத் துக்கி விடும். தோல்வியடைந்தவர்களை ஏதோ ஒரு தொழிலைக் கற்றுக் கொள்ள மற்றவர்களிடம் அனுப்பி விடுவார்கள்! இதைத் தான் அவர்கள் காலங்காலமாக செய்து வருகிறார்கள்.
அதனால் தான் வர்த்தகத் துறையில் சீனர்களை மிஞ்ச ஆளில்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. படித்தவன் வேலை பார்க்கிறான். படிக்காதவன் படித்தவனுக்கு வேலை கொடுக்கிறான்! பெரும் பெரும் நிறுவனங்கள் எல்லாம் படிக்காதவர்களால் ஆரம்பிக்கப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை.
நாம் நமது குடும்பங்களில்எதிர்ப்பார்ப்பது என்னவெனில் நமது பிள்ளைகளின் கல்வி முழுமையாக இருக்க வேண்டும். அவர்களில் பலர் தொழில் முனைவோராக வர வேண்டும். குறைவான கல்வி கற்றோர் தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு, பின்னர் சொந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும். வீட்டுக்கு ஒருவராவது வர்த்தகராக மாற வேண்டும்.
நமது இனம் வரத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நாம் வர்த்தகம் செய்திருக்கிறோம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இப்போது அதில் தொய்வுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் நமது பழைய மரபை தூக்கி நிறுத்த வேண்டும். அது நமது கடமை.
வர்த்தக சங்கத்தின் நோக்கம் மிக உயர்வானது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வர்த்தக சங்கங்கள் இதனைச் செய்ய வேண்டும். இளைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இந்த நாட்டில் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் யார் பயன் பெறுகிறார்கள்? முதலாளிகள்! நாம் தொழிலாளியாகவே இருக்கவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் எதுவும் இல்லையே!
ஊரானுக்கு உழைத்துக் கொடுத்தது போதும்! இனி நமக்காக வாழ முயற்சி செய்வோம்! நமது முன்னேற்றத்துக்காக உழைப்போம்!
வீட்டுக்கு ஒரு தொழில்முனைவோரை உருவாக்குவோம்!
No comments:
Post a Comment