Monday 6 July 2020

Covaxin கொரோனா தடுப்பு மருந்து

 டாக்டர் கிருஷ்ணா எல்லா - கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தவர்


 கொரானோ என்றாலும் சரி அல்லது கோவிட் 19 என்றாலும் சரி - அதனைத் தடுப்பதற்கான மருந்தை கண்டு பிடித்திருக்கிறார் ஒரு தமிழர். 
  
  டாக்டர் கிருஷ்ணா,  தமிழ் நாடு, திருவள்ளுர், திருத்தணியைப் பூர்விகமாகக் கொண்டவர். நடுத்தரமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் விவசாயத்துறையில் பட்டம் பெற்றவுடன் அமெரிக்கா சென்று தனது கல்வியைத் தொடர்ந்தவர். 

தனது பட்டப்படிப்பு முடிந்த பின்னர், தனது தாயாரின் வற்புறுத்தலின் பேரில்,  இந்தியா திரும்பினார்.

ஆமாம், அவரது தாயார் "எதைச் செய்தாலும் அதை நம் நாட்டில் வந்து செய்" என்று அன்பு கட்டளையிட்டதால் வேறு வழியில்லாமல் நாடு திரும்பினார்.

ஏற்கனவே "பேயர்" மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டு அவரது ஆர்வம் தொடர்ந்து மருந்துகள் தயாரிக்கும் துறையில்  இருந்ததால் ஆய்வு கூடம் ஒன்றை ஐதராபாத்தில் நிறுவினார்.

அவருடைய நிறுவனத்தின் பெயர் பாரத் பயோடெக். இந்த நிறுவனம் பல மருந்துகளைத் தயார் பண்ணி சந்தைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இப்போது அதன் கடைசி தயாரிப்பாக -கொரோனா தடுப்பு மருந்தான "கோவேக்சின்" வெளியாகியிருக்கிறது.




 டாக்டர் கிருஷ்ணா உலக -இந்திய அளவிலும் பல விருதுகளை வென்றவர்.  கடந்த 2008-ம் ஆண்டு இந்திய பிரதமரிடமிருந்து சிறந்த தொழில் நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக்கான விருதினையும் பெற்றவர்.

இந்தப் புதிய கண்டுபிடிப்பான கோவெக்சின் எப்போது சந்தையில் எதிர்பார்க்கலாம்? இந்த ஆணடு கடைசியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் எதிர்ப்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தக் கண்டுபிடிப்புக்கு மூல காரணமான டாக்டர் கிருஷ்ணா அவர்களை வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment