ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சரியான கருத்தைச் சொல்லியிருக்கிறார். .
இனி வருங்காலங்களில் தேர்தலில் போட்டியிடும் போது இந்தியர்களின் பாரம்பரியத் தொகுதி, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்று பிரித்துப் பார்க்காமல் "வெற்றி பெறும் சாத்தியம் உண்டா?" என்னும் அடிப்படையில் தான் போட்டியிட முடிவு செய்யப்படும் என்பதாகக் கூறியிருக்கிறார்.
இது சரி தானா என்று கேட்கலாம் என்றாலும் வேறு என்ன தான் வழி என்று கேட்கவும் தோன்றுகிறது!
இந்தியர்கள் தொகுதி என்றாலே அங்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் என்பது நமக்குத் தெரியும். பள்ளிக்கூடப் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவே இல்லை! அத்தனையும் ம.இ.கா.வால் ஏற்பட்ட பிரச்சனைகள்.
பள்ளிக்கூடங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களை ம.இ.கா.தலைவர்கள் எடுத்துக் கொண்டார்கள்! பேராக் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 2000 ஏக்கர் நிலத்தை ,ம.இ.கா. தலைவர்கள் ஒதுக்கிக் கொண்டார்கள்!
இவைகள் மாதிரிகள் தான். இது ஓரு மேலோட்டம், அவ்வளவு தான். இன்னும் ஆழமாகப் போனால் நாறும்! அது வேண்டாம்!
கேமரன் மலையில் விவசாயிகளின் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரி.ம. 4500.00 வாடகை! எத்தனையோ ஆண்டுகள் ம.இ.கா. தான் கொடிகட்டிப் பறந்தது! அதற்கு ஒரு தீர்வு காணப்படவில்லை! இப்போது மூன்று கட்சிகளும் வாடகையைப் பங்குப் போட்டுக் கொள்கின்றனர் என்று சொல்லப்படுகின்றது!
இதனையெல்லாம் நம்ப வேண்டாம் என்றாலும், ம.இ.கா. வின் கடந்த கால சம்பவங்களைக் கொஞ்ச திரும்பிப் பார்த்தால் "அவர்கள் அதனை செய்ய எல்லாத் தகுதியும் உள்ளவர்கள்தான்!" என்று தான் நம்ப வேண்டியுள்ளது!
இந்த நிலையில் இந்தியர்கள் தொகுதி என்று சொல்லிப் போட்டிப் போடுவதை விட எங்கு வெற்றி பெற முடியும் என்பதைத் பார்த்து போட்டிப் போடுவதே ம.இ.கா.வின் எதிர்காலத்திற்கு நல்லது என்று தான் சொல்ல வேண்டும்!
நம்மைக் கேட்டால் ம.இ.கா. இனி இந்தியர்களை நம்ப வேண்டாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது!
ம.இ.கா. தலைவர் செல்வது சரியான பாதை தான்!
No comments:
Post a Comment