யூடீயுப் பிரபலம், சுகுபவித்ரா தம்பதியினர் தங்களது சமையல் கலையின் திறமைகளைத் தொடர்ந்து ,மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
குடும்பத்தில் ஏற்பட்ட சில தடுமாற்றங்களால் தம்பதியினர் தடுமாறிப் போயினர் என்பது தான் உண்மை.
வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள், எதிர்பாராத திருப்பங்கள், மகிழ்ச்சியானது தான் என்றாலும், அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இன்னும் இவர்களுக்கு வரவில்லை! இது போன்ற திடீர் மாற்றங்கள் வாழ்க்கையில் ஏற்படும் போது யாராக இருந்தாலும் தடுமாறித்தான் போவார்கள்!
அது தான் இவர்களுக்கும் நடந்திருக்கிறது!
பயப்பட ஒன்றுமில்லை! நடந்தவை ஒரு கனவாகப் போகட்டும்! நடந்தது நடந்தது தான்! நடந்ததைப் பற்றி பேசிப் புண்ணியமில்லை. இனி நடக்கப் போவதில் தான் கவனம் செலுத்து வேண்டும்.
எதிர்காலம் தான் முக்கியம். தொழிலின் எதிர்காலம், குழைந்தைகளின் எதிர்காலம் - இவைகளை நாம் அலட்சியப்படுத்த ,முடியாது.
தெரிந்த ஒரு கலையை சும்மா தூக்கி விசிவிட முடியாது!அந்தக் கலை நம்மை வாழ வைக்கும் கலை. பல்லாயிரம் மக்களைக் கவர்ந்த ஒரு கலை.
எத்தனையோ பேர் சமையற் கலையை யூடீயுப்பில் முயற்சி செய்தார்கள். அதில் வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலர் தான்.
ஆனால் எடுத்த எடுப்பில் மாபெரும் வெற்றி என்றால் அது சுகுபவித்ரா தம்பதியினர் தான். காரணம் அவ்ர்களிடம் உண்மை இருந்தது. ஓர் அப்பாவித்தனம் இருந்தது. எந்த முன் தயாரிப்பும் இல்லாத ஓர் எளிமை இருந்தது. அத்தோடு நடைமுறை மலாய் மொழியிலும் ஒரு திறமை இருந்தது.
இவைகள் எல்லாம் சேர்ந்து தான் அவர்களுக்கு ஏற்பட்ட இந்த மாபெரும் வெற்றி. இவர்களில் யார் பெரியவர் அல்லது சிறியவர் என்கிற பேதம் ஒன்றும் இல்லை. இருவருமே சேர்ந்து தான் இந்த வெற்றியைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அவர்கள் மீண்டும் தொழிலுக்கு வருவது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது கடந்த காலங்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் இனி வருங்காலத்தை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பதை யோசித்தால் போதும்.
ஒரே தவற்றை இருமுறை செய்வது என்பது தொழிலில் ஏற்றுக்கொள்ள படாது! பழைய தவறுகளைச் செய்ய வேண்டாம்! அதனைச் சுட்டிக்காட்டிப் பேசவும் வேண்டாம்!
எல்லாம் நன்மைக்கே! என நினைத்து வருங்காலத்தை எதிர் கொள்ளுங்கள்!
தொடருங்கள் உங்கள் பணிகளை! வாழ்த்துகள்!
No comments:
Post a Comment