காணொளிகளிகளில் தங்களது சமையலின் மூலம் பிரபலமடைந்த சுகு பவித்ரா தம்பதிகளுக்கு மீண்டும் மறக்க முடியாத ஓர் அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.
அவர்கள் முதன் முறையாக பிரதமர் முகைதீன் யாசினைச் சந்தித்திருக்கின்றனர். வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சந்திப்பு.
அவர்கள் நாட்டில் சராசரியான ஒரு தம்பதியினர். அதாவது B40 எனப்படும் அடித்தட்டு மக்கள். அரசியல்வாதிகளோ வேறு எந்த வகையிலும் பிரபலமானவர்களோ அல்ல.
தங்களது சமையல் மூலம், அதுவும் யாரும் இதுவரை முயன்று பார்க்காத மலாய் மொழியில், மலாய் மக்களுக்கு இந்திய சமையலை அறிமுகப்படுத்தி ஒரே இரவில் பிரபலம் அடைந்தவர்கள்! குறிப்பாக பவித்ராவின் மலாய் மொழி ஆற்றலைக் கண்டு மலாய் மக்களே வியந்து பாராட்டினர்.
அவர்களுக்குப் பிரதமரைச் சந்திக்க ஒரு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. புத்ரா ஜெயாவில் நடைப்பெற்ற ருக்குன் நெகரா கோட்பாட்டின் ஐம்பதாம் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள கிடைத்த அழைப்பை ஏற்று அவர்கள் சென்ற போது தான் வாழ்நாளில் மறக்க முடியாத இந்த சந்திப்பு நிகழ்ந்தது!
நமக்கும் இதிலிருந்து ஒரு பாடம் கிடைக்கிறது. வாய்ப்புக்கள் எப்போது, எந்த நேரத்தில், எப்படி வரும் என்று நாம் சிந்திக்க முடியாத ஒரு நேரத்தில் அது வரும். அதனைக் கைப்பற்றிக் கொண்டு அடுத்தக் கட்டத்துக்கு நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும். அது தான் பாடம்.
சுகு பவித்ரா தம்பதியினரை வாழ்த்துவோம்! வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் உயர வேண்டும்! நாம் நமக்கான ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து உயர முயல்வோம்!
சுகு பவித்ரா தம்பதியினருக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவம்; மறக்க முடியாத நாள்!
வாழ்த்துகள்!
No comments:
Post a Comment