Monday, 27 July 2020
பக்கத்தான் கட்சிக்கு ஒரு சபாஷ்!
பக்காத்தான் ஆட்சி 18 மாதங்களே நீடித்தாலும் ஒரு சில விஷயங்களை அவர்களால் தீர்க்க முடிந்ததற்காக அவர்களைப் பாராட்டலாம்!
சான்றுக்கு ஜொகூர், நியோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் கட்டடம் பல ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்தது என்பது நமக்குத் தெரியும்.
ம.இ.கா. வினரால் அதனை வெவ்வேறு காரணங்களைச் சொல்லி இழுத்துக் கொண்டே போக முடிந்ததே தவிர கட்டடம் ஒரு முடிவுக்கு வந்த பாடில்லை! அவர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை.
கல்வி இலாகாவில் உள்ள கடைநிலை ஊழியன் கூட ம.இ.கா.வினரை மதிப்பதில்லை! பாரிசான் ஆட்சியில் என்ன நடந்தது, என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாதா, என்ன?
அதனால் அவர்கள் என்ன தான் தலை கீழாக குட்டிக்கரணம் போட்டாலும் அவர்கள் விரும்பியதை அவர்களால் செய்ய முடியவில்லை என்பது தான் உண்மை! அதனால் அவர்களுக்குள்ளேயே அனைத்தையும் செய்து கொண்டு சமுதாயத்தை மறந்து போனார்கள்! சரி. அவர்களாவது பிழைத்துப் போகட்டும் என்று நாமும் விட்டுவிட்டோம்!
ஜொகூரில் இன்னும் ஒரு சில பள்ளிகள் பிரச்சனைகளோடு தான் இருக்கின்றன. ஆனால் என்ன செய்வது? நமது கஷ்ட காலம்! பக்காத்தான் ஆட்சி கவிழ்ந்தது! அதனால் அந்தப் பள்ளிக்கூடங்களுக்கு இப்போது எந்த விடிவு காலமும் வரப் போவதில்லை!
அதனால் ம.இ.கா.வினர் என்ன சொல்லுகிறார்களோ அதைத்தான் நாம் கேட்க வேண்டும்! அவர்கள் நிறையவே சொல்லுவார்கள்! எதுவும் கதைக்கு உதவாது! ஒரு காதில் கேட்டுவிட்டு அந்தக் காதிலேயே விட்டுவிட வேண்டியது தான்! அடுத்தக் காதுவரை கொண்டு போக வேண்டியதில்லை!
இப்போதைக்கு நியோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியைக் கட்டி முடிக்க உதவியாக இருந்த முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணனைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
மீண்டும் பக்காத்தான் ஆட்சிக்கு வரும்! ம.இ.கா. விட்டுவிட்டுப் போன மிச்சம் மீதி வேலைகளைப் பக்காத்தான் அரசு தான் செய்ய வேண்டி வரும்! வேறு வழியில்லை!
பக்காத்தான் கட்சியினருக்கு ஒரு சபாஷ்! உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment