Wednesday 1 July 2020

ஓர் உண்மை வெளியாகிவிட்டது!

கடைசியாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் தனது உண்மைச் சொருபத்தைக் காட்டிவிட்டார்!

தான் மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்தால் "ஆறு மாதங்கள் மட்டுமே பதவியில் இருப்பேன் அதன் பின்னர் பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிடம் ஒப்படைப்பேன்"என்று அவர் சொன்னதில் எந்த உண்மையும் இல்லை என்று இப்போது நமக்குப் புரிகிறது.

அப்படியே அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்தால் அவர் சொன்ன சொல்லை காப்பாற்றப் போவதில்லை என்பது நிச்சயமாகிவிட்டது! 

கடைசியாக அவர்  கூறியிருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கும் செய்தியாக எடுத்துக் கொள்ளலாம். அவர் கூறியிருப்பது: பிரதமர் வேட்பாளர்களாக   ஷாபி அப்டால்,  முதலாவது துணைப் பிரதமராக அன்வார் இப்ராகிம்,  இரண்டாவது   துணைப் பிரதமராக முக்ரிஸ் மகாதீர் - இப்படித்தான் அவர் தனது கருத்தை முன் மொழிந்திருக்கிறார்!

இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளப்படாது என்பது அவருக்கே தெரியும்.  ஆனால் மலேசியர்களுக்கு ஒரு கருத்தை அவர் தெள்ளத் தெளிவாக்கி விட்டார். தான்,  அன்வார் இப்ராகிமை பிரதமராக்குவதற்குத் தயாராக இல்லை என்பதை உறுதிபடுத்தி விட்டார்!

அவர் பக்காத்தான் அரசாங்கத்தில் பிரதமராக இருந்த போது அவரே தான் மாற்றம் ஏற்படுவதற்குத் தடையாக இருந்திருக்கிறார் என்பது இப்போது நமக்குப் புரிகிறது. "பதவியை ஒப்படைப்பேன்! ஒப்படைப்பேன்!"  என்று சொல்லிச் சொல்லியே நாள்களைக் கடத்திக் கொண்டே இருந்தார்! அது ஏன் என்று இப்போது தான் நமக்கு விளங்குகிறது! 

ஆமாம், தீடீரென ஷாபி அப்டால் எங்கிருந்து முளைத்தார்?  ஏன் அவரது கட்சியில் யாரும் இல்லையா? அல்லது மேற்கு மலேசியாவில் யாரும் அவர் கண்களுக்கு  அகப்படவில்லையா? என்கிற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. 

அப்படியானால் எத்தனையோ  ஆண்டுகள் பதவியில் இருந்த டாக்டர் மகாதிர் ஒரு நல்லவனை, நேர்மையாளனை ஒருவனைக் கூட உருவாக்க வில்லையா என்பது  ஆச்சரியமாக உள்ளது!

எப்படியோ காலங்கடந்தாவது தன்னை யார் என்று மலேசியர்களுக்குக் காட்டிவிட்டாரே! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment