Friday 10 July 2020

பிரதமர் தேர்வு சரிதானா?

இப்போது பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் தேர்வாக வாரிசான் கட்சியின் தலைவரும், சாபா முதலைமைச்சருமான ஷாஃபி அப்டால் பெயர் அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது! 

இது எதிர்க்கட்சியின் பரிந்துரை என்பதை விட டாக்டர் மகாதிரின்  பரிந்துரை என்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். 

இதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது அவருக்கே தெரியும்! மேற்கு மலேசியர்கள் ஒரு கிழக்கு மலேசியரை ஏற்றுக்கொள்ளுவது அப்படி ஒன்றும் எளிதல்ல!  ஏன் அதனை டாக்டர் மகாதிரே ஏற்றுக்கொள்ள மாட்டார்!  இப்போது அவருடைய நேரம் சரியில்லை! ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பேசுகிறார்!  மேற்கில் உள்ள மலாய்க்காரர்கள் கிழக்கிலுள்ள மலாய்க்காரரை ஏற்றுக் கொள்ளுவார்களா?  முதலில் அவர் மலாய்க்காரர் என்பதையே அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.  டாக்டர் மகாதிர் அவரோடு பணி புரிந்தவர்களை யாரையும் நல்லவர் என்று சான்றிதழ் கொடுத்ததில்லை! அத்தனை பேரையும் கெட்டவர்கள் என்றே முத்திரை குத்தியிருக்கிறார்!  ஒருவரைக் கூட நல்லவர், நல்ல துணைப்பிரதமர்,  நல்ல பிரதமர் என்று அவர் சொன்னதில்லை! தன்னை தவிர மற்றவர்கள் அறிவில்லாதவர்கள் என்பதாகவே அவர் சொல்லி வந்திருக்கிறார்!

அப்படியே ஷாஃபி பிரதமர் ஆகிவிட்டார் என்றே வைத்துக் கொள்ளுவோம்!  அது நடக்கப் போவதில்லை என்பது அவருக்கும் தெரியும்! அது நமக்கும் தெரியும்! ஏன்? ஷாஃபிக்கே அது தெரிந்திருக்கும்! இரகசியம் ஒன்றுமில்லை! அவர் இப்போது இது எனக்குத் தேவைதானா என்று தான் நினைப்பார்!

இப்போது அவர் வகிக்கும் பதவியே அவருக்குப் போதும். அவர் நல்ல மனிதர் என்று டாக்டர் மகாதிர் நினைத்தால் அந்த மாநிலத்தை வழி நடுத்துவது ஒன்றே போதுமானது. காரணம் அங்கும் நம்பும்படியான தலைவர் யாருமில்லை! அவரின் மாநிலத்தை முன்னேற்றுவது என்பது சாதாரண விஷயமல்ல!  அந்த மாநிலத்தை எப்படி முன்னுக்குக் கொண்டு வரலாம் என்று திட்டமிட்டு அதனை வளமிக்க மாநிலமாக மாற்றினாலே போதும்.  அவரைப் பிரதமராக வாருங்கள் என்று கூறி வரவேற்பதும் பிறகு அவரைக் கவிழ்ப்பதும் இங்குள்ளவர்களுக்குக் கைவந்த கலை!

டாக்டர் மகாதிரின் பிரதமர் தேர்வு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை! இது ஒரு ஏமாற்று வேலை என்பது நமக்குப் புரியும். 

இங்கு, மேற்கு மலேசியாவில், பிரதமருக்கான தகுதி உள்ளவர்கள் யாரும் இல்லை என்பதே வெட்கக் கேடான விஷயம்!  அப்படியென்றால் தனது 22  ஆண்டு கால ஆட்சியின் போது இவர் எதனையும் கிழிக்கவில்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளது!

பிரதமர் தேர்வு சரியில்லை!

No comments:

Post a Comment