Thursday 30 July 2020

இதோ! கண்முன்னே நடக்கும் ஒரு துரோகம்!

ஒரு துரோகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது! ஆனால் தமிழ்ப்பள்ளிகளின் காவலன் என்று கூறும் ம.இ.கா. இது வரை வாய் திறக்கவில்லை!

மலாக்கா தமிழப்பள்ளிகளின் அமைப்பாளராக ஒரு சீனப் பெண்மணியை நியமனம் செய்திருப்பது தமிழர்கள் அனைவருக்குமே வலிக்கிறது ஆனால் ம.இ.கா. வினருக்கு மட்டும் இந்த நிமிடம் வரை வலிக்கவில்லை!

இப்போது அவர்கள் அடுத்த தேர்தலில் யார் யார் போட்டியிடுவது, எந்த எந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்பதில் தங்களது நேரத்தை மிக மிக ஆக்ககரமாக செலவு செய்து கொண்டிருக்கின்றனர்! கல்வி என்பதை ஒதுக்கி விடலாம் என்று நினைக்கின்றனர்!

பொதுவாகவே ம.இ.கா.வினர்,  இந்தியர்கள் கல்வி கற்ற சமுதாயமாக மாற வேண்டும் என்பதில் அக்கறை இல்லாதவர்கள் என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

இந்தியர்களின் நலனுக்காக ம.இ.கா.வின் கல்லூரிகள் என்கிற நிலை போய் இப்போது தலைவர்களின் நலனுக்காக கல்லூரிகள் என்கிற நிலைமைக்கு ம.இ.கா. வந்துவிட்டது!

இப்போது தான் நாம் "பக்கத்தான் அரசாங்கம் இல்லாதது நமக்கு எவ்வளவு பெரிய கேவலத்தை உண்டாக்கிவிட்டது!" என்று  நினைக்கத் தோன்றுகிறது!

"நாங்கள் தான் செய்தோம்! நாங்கள் தான் செய்தோம்!" என்று தம்பட்டம் அடித்தவர்கள் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டார்கன்?

ம.இ.கா.வினரின் கைவந்த கலை எதுவென்றால் "கோயிலை உடைத்த பிறகு,  நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறோம்!" என்று சொல்லுவது தான். மற்றபடி எதுவும் நடப்பதற்கு முன்னே எதையும் செய்வதில்லை!

நம் கண்முன்னே ஒரு துரோகம் நடந்து கொண்டிருக்கிறது. ம.இ.கா. வினர் இதுவரை எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை! அது ஒன்றே போதும் எந்த அளவுக்கு அவர்கள் இந்தியர்கள் மீது பற்றும் பாசமும் வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள!

நண்பர்களே! இது தான் ம.இ.கா.! இது தான் சமுதாயத்தின் மீது அவர்கள் காட்டும் அக்கறை! மொழி மீது அவர்களுக்கு இருக்கும் பிடிப்பு!

இவர்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டுமா?

No comments:

Post a Comment