Wednesday 22 July 2020

நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!

தமிழ்த் திரைப்படங்களில் அவர்களைப் பார்த்திருக்கிறோம்!

"நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!" என்று குடுகுடுப்பையை வைத்துக் கொண்டு குறி சொல்லுகின்ற வேலையைச் செய்பவர்கள் தான் இந்த குடுகுடுப்பைக்காரர்கள்!

இப்படி எல்லாருக்கும் நல்லதைச் சொல்லும் இவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் மட்டும் எந்த நல்லதும் நடப்பதில்லை. தங்குவதற்கு நிரந்தர இடமில்லை. கூட்டமாக வருவார்கள்! கூட்டமாகப் போவார்கள் அவர்கள் தான் நாடோடி வாழ்க்கை வாழும் குடுகுடுப்பைக்கார   சமூகத்தினர்.
 
அந்த குடுகுடுப்பைச் சமூகத்தைச் சார்ந்த, தெய்வானை, என்கிற ஒரு மாணவி 12-ம் வகுப்பு பரிட்சையில் நூறூக்கு நூறு என்று சாதனைப் புரிந்திருக்கிறார் என்பதாக BBCதமிழ் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அந்த மாணவி சந்தித்த இடர்ப்பாடுகள்

குடுகுடுப்பைகார  குடும்பம் அல்லது நாடோடி குடும்பம்
நிரந்தரமாக ஓர் இடத்தில் தங்கி பிழைப்பை நடத்த முடியாது
வீட்டு வசதிகள் இல்லை; வெறும் கூடாரங்கள் தாம் 
மின்சார வசதிகள் இல்லை; கழிப்பறை வசதிகள் இல்லை
தொழிலில் பெரியவருமானம் இல்லை. எந்நேரமும் பசியும் பட்டினியும் 
 பசியோடு நடந்து ஊர் ஊராக சென்ற அனுபவம் நிறைய

அந்த மாணவியின் சந்தோஷங்கள்

ஊர் ஊராக அலைந்தாலும் படிப்பில் அதிக ஈடுபாடு
கல்வியில் எனது சமூகத்திற்கு ஓரு தொடக்கமாக இருக்க விரும்புகிறேன்
நான் பி.காம். படித்து வங்கியில் வேலை செய்வது என் கனவு
என் சமூக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்
என் பெற்றோரின் தொழிலை மதிக்கிறேன்
என் பெற்றோரும் என் சொந்தங்களும் எனக்கு உந்துதலாக இருந்தார்கள்
தேர்வுகளில் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் எனும் மனவுறுதி 
எங்கு மாறிச் சென்றாலும் கல்வியைத் தொடர்வதில் அக்கறை இருந்தது
பள்ளிப்படிப்பின் செலவுக்காக கூடைகள் முடைவது 
"நேர்மையாக உழைத்து வாழ வேண்டும்" என்பது எங்கள் சமூக நியதி
எனது படிப்பு என்னை முன்னேற்றும் என்னும் நம்பிக்கை.

இப்போது அவர் கல்வியில் உயர திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் முன் வந்திருக்கிறார். இனிஅவருக்கு நல்லது நடக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஒரு விஷயம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. கனவு காண்பவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள்  என்கிற இரகசியத்தை  மிகவும் கீழ்த்தட்டு மாணவியான, தெய்வானை உணர்ந்திருக்கிறார். பி.காம்.படித்து வங்கியில் பணி புரிய வேண்டும் என்கிற அவரின் இலட்சியம், அவரின் கனவு   நிச்சயம் நிறைவேறும்.

இன்னொன்று "எனது படிப்பு என்னை முன்னேற்றும்" என்று திடமாக நம்புகிறார். படிப்பின் அருமையை இந்த இளம் வயதிலேயே புரிந்து வைத்திருக்கிறார். 

கல்வி நிச்சயமாக ஒருவரை முன்னேற்றும் என்பதில் சந்தேகமில்லை!

நல்ல காலம்! நமக்கும் நல்ல காலம் தான்!

No comments:

Post a Comment