பொறுத்தவர் பூமி ஆள்வார்! இப்படி ஒரு பழமொழி நம்மிடையே உண்டு.
கெடாவில் பாஸ் அரசாங்கத்தில் ஒர் இந்து கோயில் உடைபட்டது. எந்த ம.இ.கா. தலகளோ, தளபதிகளோ, சுப்பர்களோ, சுப்ரீம்களோ எதுவுமே
வாய்த் திறக்கவில்லை!
பொதுவாக அவர்களைப் பற்றி நமக்குத் தெரியும். நல்லது நடந்தால் "நாங்கள் தான்!" என்பார்கள்! கெடுதல் நடந்தால் "நாங்களில்லை!" என்பார்கள்! இந்துப் பெரு மக்களும் "நான் அவனில்லை!" என்று போய் விடுவார்கள்!
ஆனால் ரொம்ப நாளைக்குப் பிறகு இப்போது தான் ஒரு விஷயம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது!
அமைதியைக் கடைப்பிடித்தால் அதிர்ஷ்டம் நம் வீட்டைத் தேடிவரும் என்று நமது அரசியல்வாதிகள் அறிந்து வைத்திருக்கிறார்கள்!
பரவாயில்லை! முன்னாள் துணைக் கல்வி அமைச்சருக்கு, அவர் இந்திய சமுதாயத்திற்குச் செய்த சேவைக்கு, காலங்கடந்து, பெரிகாத்தான் அரசாங்கத்தில், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒன்றை நினைவில் வையுங்கள், பெரிகாத்தான் என்பது பாரிசானின் நிழல்!
ஆனால் நமக்கு வருத்தமில்லை. உண்மையைச் சொன்னால் யார் யாரோ அந்தப் பதவிக்கு அடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதனைத் தமிழர் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதே, அதுவரை நமக்கு மகிழ்ச்சி தான்.
இதோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்ற தல தளபதிகளுக்கும் வேறு பதவிகள் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். வருத்தப்பட ஒன்றுமில்லை!
சமுதாயத்திற்குத் தான் அவர்களால் எந்தப் பயனுமில்லை! அவர்களது வாழ்க்கையாவது வளமாக இருக்கட்டுமே!
இனி அவர்களால் ஜனநாயக தேர்தல் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும், நமக்கும் தெரியும்! இனி இப்படித்தான் அவர்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டும்!
எது எப்படி இருந்தாலும் சரி! டத்தோ கமலநாதனுக்கு நமது வாழ்த்துகள்! சபா துறைமுக வாரியத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்!
வாழ்த்துகள்!
No comments:
Post a Comment