Tuesday 14 December 2021

பேருந்து ஓட்டுநருக்கு 51 சாலை அபராதங்கள்!

 

   நிறுத்தி வைத்திருந்த காரின் கண்ணாடியை நொறுக்கிவிட்டுப் போகும்                                                                      பேருந்து!                                                  

இது போன்ற சம்பவங்கள் எல்லாம் நமது நாட்டில் மட்டும் தான் நடக்கும் என்று அடித்துச் சொல்லலாம்!

பேரூந்து ஓட்டுநர் மீதான  குற்றச்சாட்டுக்கள் என்ன? பேருந்தை அலட்சியமாகக் கொண்டு செலுத்தியது,  அவர் மீதான ஐந்து கைது ஆணைகள் அத்தோடு ஐம்பத்தோரு சாலை அபராதங்கள்! சம்பந்தப்பட்டவர் போதைப்பொருள் ஆசாமி என்று தெரிய வருவதோடு ஜொகூர் போலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்!

இதில் ஆச்சரியபட வேண்டியது என்னவென்றால் இந்த 44 வயது ஆசாமி கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுவனமொன்றில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருவது தான்! போலிசாரால் இவரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை! போதைப்பொருளையும் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறார்!

நம் நாட்டில் இவைகள் எல்லாம் எப்படி சர்வசாதாரணமாக நடக்கின்றன? எத்தனை பேருந்து ஓட்டுநர்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து ஓட்டுநர்களாகவும் இருக்கின்றனர் என்று புள்ளிவிபரங்கள் ஏதும் உண்டா? உண்மையைச் சொன்னால் பேருந்து நிறுவனங்கள் தான் இதற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்! பொது மக்கள் பயன்படுத்தும் பேருந்துகள் இப்படி மிக மிக அலட்சியமாக தகுதியற்ற ஓட்டுநர்களை வைத்துக் கொண்டு தொழில் செய்கின்றனவே என்பதை நினைக்கும் போது மனம் பதைப்பதைக்கிறது. மக்களின் உயிர் இவர்களுக்கு அவ்வளவு அலட்சியமா என்று கேட்கத் தோன்றுகிறது.

பேருந்துகள் என்பவை பொது மக்களின் பயன்பாட்டிற்கு உரியவை. அதனால் ஓட்டுநர்கள் நிச்சயமாக காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளவர்கள்.  ஓட்டுநர்கள் தங்களது  ஓட்டுநர் உரிமங்களைப் புதிப்பிக்கும் போது அவர்களின் பின்னணியும் ஆராயப்பட வேண்டும். இந்த கணினி யுக காலத்தில் இவைகள் எல்லாம் பெரிய பிரச்சனைகள் அல்ல. எல்லாத் தகவல்களும் விரல்  நுனியில் உள்ளன.

காவல்துறையினரிடம்  இது போன்ற தகவல்களைச் சேகரிக்க பல்வேறு  வழிகள் உள்ளன. வழிகள் உள்ளன ஆனால் அவை பயன்படுத்தப் படுகின்றனவா என்பது தான் கேள்விக்குறி! அப்படி ஒரு நிலை இல்லாததால் தான் இது போன்ற ஒருவர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஓட்டுநராக  பணிபுரிந்து வந்திருக்கிறார்! அவர் ஒரு குற்றவாளி! ஐந்து கைதாணைகள்! ஐம்பத்தோரு சாலைக்குற்றங்கள்! போதைப்பொருள் பயன்படுத்துபவர்! போலிசாரால் தேடுபவர்!

ஆனாலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை! இப்போது கூட போலிசார் இவரைக் கண்டுபிடிக்கவில்லை! ஏதோ ஒரு நல்ல மனிதர் கொடுத்த தகவல் தான் அவரை கண்டுபிடிக்க வைத்தது!

போலிசார் இனியாவது இவரைப் போன்றவர்களை வெளியே சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த வேண்டும்!

No comments:

Post a Comment