நடிகர் 'தல' அஜித் குமார் தனக்கு இனி எந்த அடைமொழியும் வேண்டாம் என்று அறிக்கை விட்டிருக்கிறார்!
என் இயற்பெயரான அஜித் குமார் என்று சொல்லுங்கள் அல்லது அஜித் என்றோ ஏகே என்றோ எழுதுங்கள், சொல்லுங்கள். அது போதும்! தல இனி வேண்டாம்!
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் அவர். இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இப்போதுள்ள நடிகர்களில் தங்களுக்கு ஏதாவது ஒரு பட்டப்பெயர் வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதிகம். சினிமாவுக்குள் வந்துவிட்டால் தங்களது பெயருக்கு முன் ஓர் அடைமொழி வேண்டும். அது இருந்தால் தான் "நாங்களும் வளர்ந்துவிட்டோம்!" என்று ரசிகர்களிடம் காட்டிக்கொள்ள அது அவர்களுக்கு ஓர் அடையாளம்!
ஆனால் அஜித் தனக்குள்ள அடையாளத்தை அனாவசியமாக தூக்கி எறிகிறார்! அவருடைய ரசிகர்களுக்கு எப்படிப்பார்த்தாலும் அது ஏமாற்றத்தைத் தான் கொண்டு வரும் என்பது ஐயமில்லை. அவர் எதைச் செய்தாலும் அதற்கும் அவரது பணிவு தான் காரணம் என்று சொல்லுவது அவரது ரசிகர்களின் இயல்பு.
பொதுவாகவே அஜித்தைப் பற்றி தேவையற்ற செய்திகள் எதுவும் வருவதில்லை. மற்ற நடிகர்களைப் போல எந்த சர்ச்சையிலும் அவர் பெயர் அடிபடுவதில்லை. அவரைப் பற்றி யாரும் தவறாகவும் பேசுவதில்லை.
ஒரு வேளை 'தல' என்னும் பெயர் அவருக்கு ஏதோ ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம். 'தல' என்று வைத்துக் கொண்டு அப்படி என்ன சாதித்துவிட்டோம் என்று கூட அவர் யோசித்திருக்கலாம். "நான் யாருக்கும் தலைவனாக இல்லை! அப்புறம் எதற்குத் தல?" என்று கூட அவர் நினைத்திருக்கலாம்.
ஏதோ ஒரு காரணம் அவரை அலைக்கழித்திருக்கிறது! அதனால் தான் 'தல'யைத் தூக்கி எறிந்துவிட்டார்! நல்லது தான்!
அவர் சொன்னால் ஊடகங்கள் கேட்கும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் ரசிகர்கள் கேட்பாளர்களா? கொஞ்ச நாளைக்கு அவர்கள் கேட்கமாட்டார்கள்1 பிறகு எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்!
ரசிகர்களே! தல இனி வேண்டாம்!
No comments:
Post a Comment