Ban on Liquor!
மதுபானம் தடை செய்வதை நான் வரவேற்கிறேன். அது நாடெங்கிலும் நடக்க வேண்டும். சில குறிப்பிட்ட இடங்களில் விற்க அனுமதியில்லை என்று சொல்லுவதும் மற்ற இடங்களில் விற்கலாம் என்று சொல்லுவதும் இப்படி ஒரு தடுமாற்றம் அர்சாங்கத்திற்குத் தேவையில்லை! உறுதியாய் இருக்க வேண்டும்.
ஒன்றைச் சொல்ல வேண்டும். ஏழைகள், நடுத்தர குடும்பத்தினர் - இவர்கள் தான் அதிகம் காப்பிக்கடைகள் மருந்துக்கடைகள், மளிகைக்கடைகளில் பீர், சம்சு போன்ற மதுவகைகளை வாங்கிக் குடிக்கின்றனர். ஆக மட்டமான மதுவகைகளை வாங்கிக் குடிப்பவர்கள் மது தடைப்பட்டால் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்ச ஆரம்பித்துவிடுவார்கள்! மட்டமான பீர்வகைகளை விட மட்டமான சாராயம் இன்னும் மோசம்! இதற்கு பலியாகுபவர்கள் இந்தியர்களாகத்தான் இருப்பார்கள்!
மதுபானம் தடை செய்யப்பட வேண்டும் என்றால் அது அனைத்தும் மலேசிய ரீதியில் இருக்க வேண்டும். கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் குடிக்கக் கூடாது மேல்மட்டத்தில் உள்ளவர்கள் குடிக்கலாம் என்று இருக்கக் கூடாது!
மேல்மட்டத்தில் உள்ளவர்களை யார் தடை செய்ய முடியும்? ஏதேனும் சாத்தியம் உண்டா? இல்லவே இல்லை! மேல்மட்டத்தில் உள்ளவர்கள் யார்? அரசியல்வாதிகள், அதிகாரத்தில் உள்ளவர்கள், சிறிய பெரிய பதவியில் உள்ளவர்கள், மேட்டுக்குடியினர் - இவர்களையெல்லாம் யார் கட்டுப்படுத்த முடியும்? சாத்தியம் உண்டா?
அப்படியென்றால் மதுபானத் தடை என்பது சாத்தியமில்லை! சட்டம் கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் என்றால் அப்படிப்பட்ட சட்டமே வேண்டாம்!
சட்டம் பொதுவானது. யாருக்கும் வளைந்து கொடுக்காதது. அப்படியிருக்க ஒரு சாரார் குடிக்கலாம் ஒரு சாரார் குடிக்கக் கூடாது என்பது ஏற்றுக்கொள்ள இயலாது.
அரசாங்கம் தீர்க்கமான ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஒன்று வேண்டும் அல்லது வேண்டாம்! கடிகார முள் போல இப்படியும் அப்படியும் ஊசாலாடிக் கொண்டிருக்கக் கூடாது!
தடை செய்க! முழுமையாக தடை செய்க!
No comments:
Post a Comment