பட்டத்தின் கயிறு காப்பாற்றியது!
பட்டம் பறக்கவிடுவது என்பது எல்லா ஊர்களிலும் உண்டு. இளைஞர்களிடையே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டு என்றால் அது பட்டம் விடுவது தான்.
பட்டம் விடுவதிலும் ஆபத்து உண்டு என்று காட்டியிருக்கிறது சமீபத்திய யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வு ஒன்று. பட்டம் பெரிதாக இருக்க வேண்டும் என்பது அந்த தமிழ் இளைஞர்களின் ஆசை.
அவர்களின் ஆசைப்படி ராட்சத பட்டம் ஒன்றை உருவாக்கினர். அதனை பறக்க விடுவதற்காக காற்று வீசும் இடமாகப் பார்த்து பட்டத்தைக் கொண்டு சென்றனர். அனைத்து சரி.
ஆனால் பட்டத்தை பறக்க விட முயலும் போது ஒரு தவறு ஏற்பட்டு விட்டது. முன் பக்கம் இருந்த இளைஞர்கள் பட்டத்தின் கயிறை விடுமுன் பின்பக்கத்தில் இருந்தவர்கள் கயிற்றை தங்கள் பிடியிலிருந்து விட்டுவிட்டனர்! அப்போது ஏற்பட்ட குளறுபடியில் பட்டம் பறக்க ஆரம்பித்து விட்டது. ஓர் இளைஞன் மட்டும் கயிற்றை விடவில்லை! அதனால் அந்த இளைஞன் பட்டத்தோடு அவனும் சேர்ந்து பறக்க வேண்டியதாயிற்று!
அந்த நிமிடம் தான் மிகவு அதிர்ச்சியான நேரம். அனைவரும் பயந்து போயினர். அந்த இளைஞனிடம் கயிற்றை விட்டு விடும்படி கத்த ஆரம்பித்தனர். பட்டம் முப்பது அடி உயரம் பறந்திருக்கும். அதன் பின்னர் தான் இளைஞனுக்குச் சுய நினைவு வந்திருக்கிறது! உடனே கயிற்றை விட்டுவிட்டு கீழே குதித்திருக்கிறான்! சொற்ப காயங்களுடன் தப்பித்துக் கொண்டான்! எல்லாம் ஐந்து நிமிட நேரத்தில் அனைத்தும் முடிந்தது! எந்த உயிருடற் சேதமும் ஏற்படவில்லை என்பதையறிய நமக்கும் மகிழ்ச்சி.
இவ்வளவு பிரச்சனைகள் வந்ததற்கான காரணங்கள் என்ன? அளவு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். பட்டம் விடுவதற்கும் ஓர் அளவுகோல் உண்டு. பட்டம் விடும் போது, அளவுக்கு மீறி பெரிதாக இருந்தால், அதன் பின் விளைவுகளையும் பார்க்க வேண்டும். அது எங்கேயாவது போய் விழுந்தால் - விழக்கூடாத இடத்தில் விழுந்தால் அது ஆபத்தில் போய் முடியும்!
அந்த இளைஞர்களுக்கு அது ஒரு நல்ல பாடம்! பட்டம் விடலாம்! ஆனால் மனிதனைப் பறக்க விடக்கூடாது!
No comments:
Post a Comment