Friday 24 December 2021

இவரல்லவோ அமைச்சர்!

 

                                         Madagaskar's Police Minister,  Mr.Serge Gelle

அமைச்சர்கள் என்றால் நமது ஞாபத்திற்கு வருவதென்ன?

தொந்தி, தொப்பை , சோத்துமாடு -  இப்படியே  நாம் பார்த்து பழகிவிட்டோம்!

ஆனால் ஓர் அமைச்சர் இதையெல்லாம் மீறி விட்டார்! சாவுக்கே சாவு மணி அடித்துவிட்டார்!

ஆனால் இங்கு இல்லை.! மடகாஸ்கார் நாட்டில் நடந்த சம்பவம் இது. அந்நாட்டின் போலீஸ் அமைச்சராக இருப்பவர் செர்கே கேலே என்பவர். அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர்  கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. பயணம் செய்தவர்களில் 39 பேர் அந்த விபத்தில் பலியாகினர்.

அமைச்சர் செர்கே அவர்கள் சாதாரண மனிதர் அல்ல.  விளையாட்டுகளில் தீவிரமாக பங்கேற்பவர். அந்த விபத்தில் இருந்து தப்பிக்க அந்நேரத்தில் அவருக்குக் கையில் கிடைத்தது  விமான இருக்கை ஒன்று. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது அவரைப் பொறுத்தவரை  மிகச் சரி.

அந்த இருக்கையைப் பயன்படுத்தி கடலில் நீந்த ஆரம்பித்திருக்கிறார். அவருடன் இன்னொரு  உயிரோடு இருந்த  நபரும் இருவருமாக  சேர்ந்து அந்த  அலைகடலில் நீந்தி வந்திருக்கின்றனர். கடைசியில் அவர் பிரிந்து போனார்!

கடலிலிருந்து கரைக்கு வந்து சேர சுமார் 12 மணி நேரம் அவருக்குப் பிடித்திருக்கிறது!  கடலில் நீந்தி வருவது என்பது சாதாரண விஷயமல்ல.  இடையிலே இடற வைக்க ஏகப்பட்ட இன்னல்கள்!  அஞ்சாமல்  அனைத்தையும் எதிர்நோக்க வேண்டும்! முன் வைத்த கால் முடங்கும் சாத்தியம் உண்டு.  அனைத்தையும் அஞ்சாமல்  அசராமல் எதிர்நோக்க வேண்டும். அனைத்தையும் கடந்து தான் அவர் நீச்சலடித்து வந்திருக்கிறார்.  மிகவும் பயங்கரம். அந்த பயங்கரத்தை கடலில் அனுபவித்திருக்கிறார்.

இன்னொன்றும் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது  அமைச்சர் செர்கே இளம் வயதினர் அல்ல. அவருக்கு வயது 57 ஆகிறது. 30 ஆண்டுகள் காவல்துறையில் பணி புரிந்திருக்கிறார். சமீப காலத்தில் தான் அவர் காவல்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார்.

இந்த வயதில் பல அதிர்ச்சிகளையும் அதிர்வுகளையும் அவர் அந்த கடலில் அனுபவித்திருந்தாலும்  கரைக்கு வந்ததும் அவர் சொன்ன முதல் வார்த்தை: "மரணத்துக்கான நேரம் இன்னும் எனக்கு வரவில்லை!" என்பது தான்.  அதில் சோர்வும் இருந்தது! மகிழ்ச்சியும் இருந்தது!

இன்னும் நீண்ட நாள் வாழ்ந்து நல்லதைச் செய்ய நம்முடைய வாழ்த்துகள்!


No comments:

Post a Comment